கிரிக்கெட் வரலாற்றின் ஆல்டைம் பெஸ்ட் 5 விக்கெட் கீப்பர்கள் – லிஸ்ட் இதோ

Keeper-1
- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றில் நூற்றுக்கணக்கான விக்கெட் கீப்பர்கள் ஆடி இருக்கிறார்கள். ஒருசில விக்கெட் கீப்பர்கள் அந்த அணிக்கு பெரும் முதுகெலும்பாக இருந்து விளையாடி உள்ளனர். அப்படி தங்கள் அணிக்கு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களாக இருந்த கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த 5 விக்கெட் கீப்பர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

Boucher

- Advertisement -

மார்க் பவுச்சர் :

தென்னாபிரிக்காவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்றும் கூறலாம்..பதினைந்து வருடங்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 467 போட்டிகளில் விளையாடி 952 கேட்ச் மற்றும் 46 ஸ்டம்பிங் என 998 விக்கெட்டுகள் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 5515 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 4286 ரன்களும் எடுத்துள்ளார்.

Gilly

ஆடம் கில்கிறிஸ்ட் :

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான். இவரைப் பார்த்து தான் தற்கால பல கிரிக்கெட் வீரர்கள் விக்கெட் கீப்பர்களாக மாறி வருகின்றனர். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 905 கேட்ச் மற்றும் 92 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

dhoni

மகேந்திர சிங் தோனி :

- Advertisement -

இவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மின்னல் வேக ஸ்டம்பிங்கிதற்கு சொந்தக்காரர். மொத்தம் இவர் சர்வதேச போட்டிகளில் 628 கேட்ச் மற்றும் 193 ஸ்டம்பிங் செய்துள்ளார் மேலும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களும் டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் குவித்துள்ளார்.

Sanga

குமார் சங்ககாரா :

- Advertisement -

இலங்கை அணி உருவாக்கிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் டெஸ்ட் ஒருநாள் என மொத்தம் 694 போட்டிகளில் விளையாடி 539 கேட்ச் மற்றும் 139 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Healy

இயான் ஹீலி :

இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 90களில் ஆடிய விக்கெட் கீப்பர் ஆவார் .11 வருடங்களில் 257 சர்வதேச போட்டிகளில் ஆடி 560 கேட்ச் மற்றும் 668 ஸ்டம்பிங் ஆகியவற்றை செய்துள்ளார்.

Advertisement