மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணி இதுதான் – வீரர்களின் விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகமுக்கியமான ஜாம்பவான் அணியாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 12 சீசன்களில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்று முதலிடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 15, 17, 19 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 2017 ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், 2019ஆம் ஆண்டு ஆண்டான கடைசி ஆண்டு சிஎஸ்கே அணியை ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

MI

- Advertisement -

தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் இவ்வாறு தொடர்ச்சியான வெற்றிக்கு அந்த அணியில் உள்ள மிகச்சிறந்த பீல்டர்களே காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. தற்போது இந்த பதிவில் மும்பை அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணி குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இந்த பட்டியலில் முதலில் இடம் பெறுபவர் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின்

1) சச்சின் டெண்டுல்கர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான இவர் முதல் இரண்டு ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் மூன்றாவது தொடரில் அதிக ரன்கள் விளாசி ஆரம்பிக்கப்பட்ட ஆரஞ்ச் தொப்பியினை பெற்றார். பின்னர் 2013 ஆம் ஆண்டு தனது கடைசி ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றார். அந்த ஆண்டு மும்பை கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Sachin

2) லெண்டில் சிம்மன்ஸ் : மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்டநாள் எதிர்பார்த்த துவக்கவீரராக இவர் கிடைத்தார். அவரது அதிரடி கைகொடுக்க 2015ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல அவர் காரணமாக அமைந்தார். அந்த தொடரில் அவர் 540 அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3) ரோகித் சர்மா : மும்பை அணி 4 முறை கோப்பையை வெல்ல கேப்டன் ரோகித் அவரது சிறப்பான பங்களிப்பை அளித்தார். இவரது தலைமையிலேயே மும்பை அணி அனைத்து கோப்பைகளையும் கைப்பற்றியதன் காரணமாக இவரையே கேப்டனாக தேர்வு செய்துள்ளோம். ரோஹித் மும்பை பின்னால் ஒரு தூணாக இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

Rohith

4) அம்பத்தி ராயுடு : கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அம்பத்தி ராயுடு சுமார் 8 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் விளையாடினார். மும்பை அணியின் மிடில் ஆர்டரில் வலிமை சேர்க்கும் வீரராக ராயுடு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

5) சூர்யகுமார் யாதவ் : மும்பை அணியின் இளம் வீரரான இவர் லேட்டரல் என்ட்ரி ஆக இருந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறினார். கொல்கத்தா அணிக்காக சில ஆண்டுகள் விளையாடியவர் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

6) பொல்லார்ட் : இவரின் வருகைக்குப் பின்னர் மும்பை அணி மிக வலிமையாக மாறியது என்றால் அது மிகை அல்ல. மும்பை அணியின் சிறந்த பினிஷர்களில் ஒருவராக இவர் உள்ளார். மேலும் இவரது அபாரமான பீல்டிங் இன்றுவரை சிறப்பாகவே உள்ளது. மேலும் தனி ஒருவராக போட்டியை முடித்து கொடுப்பதிலும் அவர் வல்லவராக இருக்கிறார்.

- Advertisement -

Pollard

7) ஹார்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று தனது அதிரடி காண்பித்த காரணத்தினாலேயே இந்திய அணிக்கு தேர்வானார். அந்த அளவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியான பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர்.

8) ஹர்பஜன்சிங் : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் ஏராளமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் மும்பை அணிக்காக அதிக டாட் பால் வீசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

9) மிட்சல் மெக்லனகன் : 2015ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் அமைதியாக இருந்தாலும் பல வெற்றிகளுக்கு தனது பந்துவீச்சின் மூலம் முக்கிய காரணமாக உள்ளார். பும்ரா மற்றும் மலிங்காவிற்கு இவர் சிறந்த சப்போர்ட் கொடுத்து வருகிறார்.

10) மலிங்கா : டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆன இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மலிங்கா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி நேரத்தில் மும்பை அணியை தனது சிறப்பான பந்துவீச்சால் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் பெயர் போனவர் என்று அழைக்கப்படுவர்.

Malinga-1

11) பும்ரா : தற்போதைய உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான இவரும் ஐ.பி.எல் போட்டிகளின் மூலமாகவே இந்திய அணியில் இடம்பிடித்தார். இவரது வித்தியாசமான பவுலிங் ஆக்சன் மற்றும் வேகம் இவருக்கு நிறைய விக்கெட்டுகளை பெற்றுத்தந்தது.

மும்பை ஆல்டைம் லெவன் அணி : 1) சச்சின் டெண்டுல்கர் 2) சிம்மன்ஸ் 3) ரோஹித் சர்மா 4) அம்பத்தி ராயுடு 5) சூர்யகுமார் யாதவ் 6) பொல்லார்ட் 7) ஹார்டிக் பாண்டியா 8) ஹர்பஜன் சிங் 9) மிட்சல் மெக்லனகன் 10) மலிங்கா 11) பும்ரா

Advertisement