11 வெவ்வேறு நாடுகள் 11 வீரர்கள். உலகின் சிறந்த ஒருநாள் அணி இதுதான் – அணிவீரர்களின் விவரம் இதோ

World-team
- Advertisement -

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிறந்த வீரரை நாம் பல்வேறு காலகட்டத்திலும் பார்த்துவருகிறோம் அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வீரர்கள் அடையாளமாக விளங்குவதையும் நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சிறந்த வீரர்களை கொண்டு கட்டமைக்கப்பட்ட மிகச்சிறந்த ஒருநாள் அணியை தற்போது பார்ப்போம்.

Sachin

- Advertisement -

இந்த அணியின் தொடக்க வீரராக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர் இடம் பெறுகிறார். இவர் இந்திய அணியில் இருந்து இந்த அணியில் இடம் பெற மிகவும் தகுதியானவர். அதேபோல் நியூசிலாந்து அணியில் இருந்து துவக்க வீரராக பிரண்டன் மெக்கல்லம் இடம்பெறுகிறார். அந்த நாட்டில் இவரை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆஸ்திரேலியாவிலிருந்து இருக்கி பாண்டிங் இந்த அணியில் இடம் பெறலாம். இவர் பேட்ஸ்மேன் ஆகவும் கேப்டனாகவும் செயல்படுவார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து மிகச் சிறந்த வீரராக வலம் வந்த லாராவை எடுத்துக்கொள்ளலாம். இவர் இடதுகை ஆட்டக்காரர். இந்த இடத்திற்கு சரியாக இருப்பார்.

Sangakkara

இலங்கை அணியில் இருந்து குமார் சங்கக்காரவை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவர் விக்கெட் கீப்பராக இந்த அணியில் இடம் பிடிக்கலாம். ஜெயசூரியாவை எடுத்துக்கொண்டால் இந்த இடத்தில் அவரால் இறங்க முடியாது. ஆல்-ரவுண்டராக தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் இடம்பெறுகிறார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இடம் பெற்ற வீரர் இவர்தான்.

- Advertisement -

வங்கதேசத்தில் இருந்து அந்த அணி உருவாக்கிய மிகச்சிறந்த வீரர் ஷகிப் அல் ஹசன் இடம்பெறுகிறார். பாகிஸ்தானில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், இங்கிலாந்திலிருந்து வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜிம்பாப்வே முன்னாள் கேப்டனும் வேகப்பந்துவீச்சாளருமான ஸ்ட்ரீக்கை தேர்வு செய்யலாம். மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் ஆகியோரை வைத்து இந்த அணியை கட்டமைக்கலாம்.

RashidKhan

மகேந்திர சிங் தோனி, ஆடம் கில்கிறிஸ்ட், கிறிஸ் கெய்ல், சனத் ஜெயசூரியா போன்ற வீரர்கள் இந்த அணியில் இடம்பெற முடியாமல் போனது வருத்தம்தான். இருப்பினும் இப்போது தேர்வு செய்யப்ட்டுள்ள அணி வீரர்களின் விவரம் இதோ :

சச்சின் டெண்டுல்கர், பிரண்டன் மெக்கல்லம், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, சங்கக்காரா, ஜாக் காலிஸ், ஷாகிப் அல் ஹசன், வாசிம் அக்ரம், ரஷித் கான், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹீத் ஸ்ட்ரீக்

Advertisement