வெளிநாட்டு வீரர்களை மட்டும் கொண்ட பெஸ்ட் ஐ.பி.எல் லெவன் அணி – வீரர்களின் விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடர்களில் வெளி நாட்டு வீரர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு அணியிலும் மொத்தம் 24 பேர்கள் இருப்பார்கள். இதில் 11 பேர் ஒவ்வொரு போட்டியிலும் ஆட முடியும். இந்த பதினோரு பேரில் அதிகபட்சம் நான்கு வீரர்கள் தான் வெளிநாட்டு வீரர்களாக இருக்க முடியும். அதி திறமை வாய்ந்த வீரர்கள் மட்டுமே ஒவ்வொரு அணிகளும் இருப்பார்கள். இப்படி வெளிநாட்டு வீரர்களை வைத்து ஒரு ஐபிஎல் மிகச் சிறந்த அணியை உருவாக்கினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

ipl-bowlers

இந்த அணியில் தொடக்க வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் இருப்பார்கள். இந்த அணியின் கேப்டனாகவும் டேவிட் வார்னர் தான் செயல்படுவார். மூன்றாவது இடத்தில் அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸ் களமிறங்குவார். இவர்தான் விக்கெட் கீப்பராக இருப்பார்

- Advertisement -

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன், 5வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கெரோன் பொல்லார்ட், ஆறாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அன்ரே ரசல், ஏழாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ இருப்பார்.

Bravo1

சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் மற்றும் லசித் மலிங்க ஆகியோர் இடம் பெறுவார்கள். இதுவே ஐ.பி.எல் தொடரின் சிறந்த வெளிநாட்டு அணியாக கணிக்கப்பட்டுள்ளது.

warner

வெளிநாட்டு வீரர்கள் கொண்ட ஐ.பி.எல் பெஸ்ட் லெவல் அணி இதோ : கிறிஸ் கெயில், டேவிட் வார்னர் (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன், கெரோன் பொல்லார்ட், ஆன்ட்ரே ரசல், டுவைன் பிராவோ, சுனில் நரைன், ரஷீத் கான், டேல் ஸ்டெயின், லசித் மலிங்கா.

Advertisement