ஐபிஎல் : இதெல்லாம் ஒரு சாதனையா, நான் ஏற்று கொள்ளமாட்டேன்…தொடக்க அதிரடி வீரர் ஓபன் டாக் ! – யார் தெரியுமா ?

finch1

11வது சீசன் மும்பை வான்கடே மைதானத்தில் பாலிவுட் நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கி கடந்த இரண்டாண்டுகளாக தடைபெற்று விளையாடாமல் இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் பங்கேற்றன.

aaron

11வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன. இந்த ஐபிஎல் தொடருக்காக உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு வீரரான ஆஸ்திரேலிய அணியினை சேர்ந்த ஆரோன் பிஞ்ச் இம்முறை பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையிலும் கடந்த 11சீசனில் ஆரோன் பிஞ்ச் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியவர் என்கிற சாதனையை தான் தற்போது புரிந்துள்ளார்.இதுவரையிலும் ஐபிஎல் போட்டிகளில் ஏழு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.2008ம் ஆண்டு முதல் தொடங்கிய ஐபிஎல் போட்டிகளில்,2010ம் ஆண்டு முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

Finch

பின்னர் அடுத்த 2011ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 2012ம் ஆண்டும் டெல்லி அணிக்காக விளையாடினார்.கடந்த 2013ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாட தேர்வுசெய்யப்பட்ட பிஞ்ச்,கடந்த 2014ல் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடினார்.

- Advertisement -

கடந்த 2015ல் மும்பை இந்தியன்ஸ் பிஞ்ச்சை ஏலத்தில் எடுத்தது. அடுத்த 2016ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததால் அந்த அணிக்காகவும் விளையாடிய பிஞ்ச்இந்த 11வது சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். தன்னுடைய திருமணத்திற்காக டெல்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாடிய பிஞ்ச் முதல் பந்திலயே டக் அவுட்டாகி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

Gautam

இவரைப்போல மேலும் சில வீரர்கள் வருடம்தோறும் வேறு வேறு அணிகளுக்காக மாறி மாறி விளையாடி வரும்போதும் இதுவரையிலும் ஒரு கோப்பையை கூட கைப்பற்றிடாத பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மட்டும் முதல் சீசன் முதல் இந்த சீசன் வரை விளையாடி வருகின்றார் அந்த அணியின் கேப்டன் விராட்கோலி.

Advertisement