ஐ.பி.எல் ஆல் ஸ்டார்ஸ் போட்டிக்கான தேதி மற்றும் மைதானம் அறிவிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இம்முறை 2020 ஆம் ஆண்டு 13 ஆவது சீசனாக ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடர் மார்ச் இறுதியில் இருந்து துவங்க உள்ளது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான பிசிசிஐ கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த கூட்டத்தில் வழக்கம் போல இரவு 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் போட்டிகள் தொடங்கும் என்றும் மேலும் இந்த தொடரில் முக்கியமாக விதிமுறையாக நோபால் அம்பயரும் மற்றும் காயமடைந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரர் என சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

மேலும் இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மார்ச் 25 ஆம் தேதி தெற்கு மற்றும் மேற்கு அணிகள் இரு அணிகளுக்கு இடையேயான ஆல் ஸ்டார்ஸ் போட்டி ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் மும்பை ஒரு அணியாகவும், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் ஓரணியாகவும் இணைந்து ஆல் ஸ்டார்ஸ் போட்டி நடைபெற உள்ளது.

ipl 2018

இந்த போட்டி திட்டமிட்டபடி மார்ச் 25 ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த போட்டியில் பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்களும், பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement