யார் சொன்னது எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. தேவையில்லாமல் பரப்பாதீங்க : கடுப்பான இங்கிலாந்து வீரர்

- Advertisement -

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரம் முதல் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த கால்பந்து, கிரிக்கெட் போன்ற பெரும் விளையாட்டுப்போட்டிகள் கைவிடப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டும் உள்ளன.

corona 1

- Advertisement -

ஆனால் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் நாக்அவுட் சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இந்த லீக்கில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் கராச்சி அணிக்காக விளையாடி வந்தார்.

அதிலும் இந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஒரு வீரருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை இதன் காரணமாகத்தான் தொடர் கைவிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alex-Hales

தற்போது வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யார் அந்த வீரர் என்று தெரியவில்லை. ஆனால் அது இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்தான் என வர்ணனையாளர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்தின் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவியது.

- Advertisement -

இதன்காரணமாக இந்த செய்தி காட்டுத் தீ போல் உலகெங்கும் பரவியது. இதனால் கடுப்பான அலெக்ஸ் ஹேல்ஸ் கரோனா வைரஸ் என்னை பாதிக்கவில்லை. வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள் என காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் உலக நாடுகள் இருக்கும் வேளையில் இப்படிப்பட்ட தவறான செய்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்துங்கள் என்று அலெக்ஸ் ஹேல்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement