இந்த ஐ.பி.எல் ஏலத்தில் அதிக கவனத்தை ஈர்க்கபோகும் அதிரடி வீரர். இவரை எடுக்குறதுக்கு 3 அணிகள் போட்டி – லிஸ்ட் இதோ

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 18ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்திருக்கின்றனர். இதில் இந்திய வீரர்கள் 814 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 283 பேரும் பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Hales

இதுபோக சூதாட்டம் காரணமாக தடை செய்யப்பட்ட ஶ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், இந்திய டெஸ்ட் வீரர்கள் புஜாரா மற்றும் விஹாரி ஆகயோரும் இந்த ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 6 போட்டிகளில் பங்கு பெற்று 148 ரன்கள் குவித்திருக்கிறார். இவரை இந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மூன்று அணிகள் தேர்வு செய்ய போட்டி போடுகிறது. ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் தான் இவரை தேர்வுசெய்ய மோதுகிறது. ஏனென்றால் இவர் சிறந்த தொடக்க வீரர். இவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலககோப்பை தொடருக்கு முன்னர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் :

ராஜஸ்தான் அணி இந்த ஆண்டு தங்களது கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதனால் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து விளையாடுவதற்கான அதிரடி வீரர் ஒருவர் தேவைப்படுகிறது. அதற்கு இந்த இங்கிலாந்து வீரரை ராஜஸ்தான் அணி எடுக்க மும்முரம் காட்டி வருகிறது.

Hales 1

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

ராஜஸ்தான் அணியில் இருந்து இரண்டு தொடக்க வீரர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்சை வெளியேற்றப்பட்டும், பார்திவ் பட்டேல் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றும் இருக்கிறார்கள். இதனால் பெங்களூர் அணி தொடக்க வீரராக அலெக்ஸ் ஹேல்ஸை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கின்றனர்.

hales

கிங்ஸ் லெவன் பஞ்சாப் :

பஞ்சாப் அணியில் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர் தொடக்க வீரர்களாக இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்திற்கு மயங்க் அகர்வால் இருக்கிறார். ஆனால் மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடும் அளவிற்கு பஞ்சாப் அணியில் யாருமில்லை. இதற்காக பஞ்சாப் அணி இவரை தேர்வு செய்ய காத்திருக்கிறது.