ENG : இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் கிரிக்கெட் விளையாட தடை – காரணம் இதுதான்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Alex-Hales
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Hales

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்கமருந்து உபயோகித்த காரணத்தினால் 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தால் வீரர்களுக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்கமருந்து உபயோகித்து கண்டறியப்பட்டது. இதனால் இந்த தண்டனையை ஹேல்ஸ்க்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்தது.

ஹேல்ஸ் இதுவரை 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2419 ரன்களை அடித்துள்ளார். ஒரே போட்டியில் அதிகபட்சமாக 171 ரன்களை குவித்துள்ளார். 60 டி20 போட்டிகளில் பங்கேற்று 1644 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 116 ரன்களை குவித்துள்ளார். ஹேல்ஸ் மற்றும் ஜேசன் ராய் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களாக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Hales 1

ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து ஹேல்ஸ் குடிபோதையில் பாரில் ஒருவரை தேவையின்றி வீண்வம்பு செய்து தாக்கி சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement