England ECB : உலகக்கோப்பை அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி நீக்கம் – காரணம் இதுதான்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Alex-Hales
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Hales 1

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்கமருந்து உபயோகித்த காரணத்தினால் 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தால் வீரர்களுக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அலெக்ஸ் ஹேல்ஸ் ஊக்கமருந்து உபயோகித்து கண்டறியப்பட்டது. இதனால் இந்த தண்டனையை ஹேல்ஸ்க்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்தது.

இந்நிலையில் தற்போது தடைசெய்யப்பட்ட போதைமருந்தினை ஹேல்ஸ் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவர் உலகக்கோப்பை ஒருநாள் அணி மற்றும் இதர அணியில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. இதனால் ஹேல்ஸ்க்கு பதிலாக மாற்று வீரரை இங்கிலாந்து அணி தேர்வு செய்ய உள்ளது.

Hales

இந்த நிகழ்வினால் அலெக்ஸ் ஹேல்ஸ் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே சகவீரரான ஸ்டோக்ஸ் உடன் இணைந்து மதுபோதையில் ஒருவரை தாக்கி வழக்கிற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Advertisement