நானும் தோனியை போன்று மாறவேண்டும் அதுவே என் ஆசை – ஆஸி இளம் வீரர் பேட்டி

australianteam

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.

Dhoni

இவ்விரு அணிகளுக்கு இடையே முதலாவது போட்டி நாளை 14ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் குறைவான நேரம் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இளம் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலகின் தலைசிறந்த பினிஷர்களை பார்த்தோமானால் குறிப்பாக தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு அவருக்கு எதிராக ஆடும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றேன். அவரது ஆட்டத்தை நெருக்கமாக இருந்து கவனித்ததில் அவர் கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

Alex Carey

அவர் வழியில் நானும் ஒருநாள் செல்வேன் என்னுடைய ஆட்டம் இன்னும் நிறைய இடத்தில் சரிப்படுத்த வேண்டியிருக்கிறது மிடில் ஆர்டரில் அல்லது கீழே இறங்கி அவரை போன்று விளையாட நான் நினைக்கிறேன் மேலும் தோனியை போன்று ஆஸ்திரேலிய அணிக்காக நான் ஒரு பிரிவாகவும் உருவெடுக்க விரும்புவதாக அறிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -