கோடிகளை குவிக்கும் வீரர்கள் கூட இத யோசிக்கல. ஆனா இந்த அம்பயர் மனச பாத்தீங்களா ? – விவரம் இதோ

Aleem-Dar
- Advertisement -

கொரோனா வைரஸ் இந்தியாவில் காட்டுத்தீ போன்று வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்தில் 100க்குள் இருந்த கரோனா தற்போது 700 பேரை தாக்கியுள்ளது. மேலும் அடுத்த வாரத்தில் இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதனால் இந்தியாவில் இன்னும் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

corona

- Advertisement -

உலகம் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தபாடில்லை. அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது வரை 25 ஆயிரம் பேர் இதனால் தங்களது உயிரை இழந்துள்ளனர். உயிர் ஒருபுறம் போகிறது என்றால் இதனால் எந்த வேலையும், பொருளாதார ரீதியிலான எந்த இயக்கத்தையும் செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக உலகப் பொருளாதாரமும் சரிந்துள்ளது. மேலும் பல ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் வேலைகளை இழப்போரின் எண்ணிக்கை கூடியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பலர் வேலை இழந்துள்ளனர்.

Corona-1

பாகிஸ்தானிலும் ஊரடங்கு பிறப்பிக்கும் அளவிற்கு இந்த வைரஸ் தொற்றி விட்டது. ஒருவேளை அவ்வாறு பாகிஸ்தானிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் தனது உணவகத்தை வேலை இழக்கும் மக்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம், அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என பாகிஸ்தானின் நடுவர் அலீம் தார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Aleem Dar 1

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் பரவியுள்ளது. நம்முடைய ஆதரவில்லாமல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. அரசை வலியுறுத்தி உள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். நாடு முடக்கப்படும் போது வேலையில்லாமல் இருப்பவர்கள் என்னுடைய உணவகத்தில் வந்து இலவசமாக உணவு அருந்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் அலீம் தார்.

Advertisement