இவர் இருக்கற வரைக்கும் சிஎஸ்கேவ யாராலயும் ஒண்ணும் செய்ய முடியாது – அல்பி மோர்கல் ஓபன் டாக்

Morkel-2

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மார்கல் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல முறை வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

Morkel

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். தற்போது ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் இன்னும் நான்கு நாட்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் வான்கடே மைதானத்தில் மோதி இருக்கும். வழக்கம்போல் ஐபிஎல் தொடர் கோலாகலமாக திருவிழாவைப் போல் நடந்து இருக்கும்.

ஆனால் விளையாட்டை விட உயிர் முக்கியம் என்பதால் மக்களும், பெரும் பொது நிறுவனங்களும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இருந்தாலும் இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில் இந்த கரோனா தொற்று நீங்க கண்டிப்பாக கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும்.

Morkel 1

அப்போது சர்வதேச தொடர்கள் தொடங்கிவிடும் அதனால் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கண்டிப்பாக கேள்விக்குறியே. இதனால் ஐபிஎல் தொடர் நடப்பது சற்று முடியாத காரியம்தான்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அல்பி மார்கள் தனது கேப்டனை பற்றி பேசியுள்ளார். தோனி பற்றி அவர் கூறியதாவது :

- Advertisement -

சென்னை அணியின் கேப்டனாக தோனி தன்னுடைய அணியிள் உள்ள வீரர்களின் திறமையை சரியாக கணிப்பவர், அந்த திறமையை சரியாக மதிப்பீடு அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவார். அந்த வித்தை அவருக்கு நன்றாக தெரியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருக்கும் வரை அந்த அணி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

Dhoni 1

கடந்த பல தொடர்களில் 8 முறை இறுதிப் போட்டியில் சென்னை அணி விளையாடி இருக்கிறது. மேலும் பலமுறை சென்னை அணி இறுதிப்ப்போட்டிக்கு முன்னேறி சிறப்பாக விளையாட தோனியே காரணம் என்று கூறினார் அல்பி மார்கல்.