நானா இருந்தா தோத்துருப்பேன்.. அந்த 2 தைரியமான முடிவால் ஆஸியை நொறுக்கிய இந்தியாவை பாராட்டிய குக்

alastair cook 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் தங்களை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்த இந்தியா சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியில் இருந்து கம்பேக் கொடுத்தது.

முன்னதாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா தலைமையில் விளையாடி இந்தியா அபார வெற்றி பெற்றது. குறிப்பாக 150க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் ஆஸ்திரேலியாவை 104க்கு ஆல் அவுட்டாக்கியது. அப்படியே 2வது இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்த இந்தியா 534 ரன்கள் இலக்காக நிர்ணயித்து ஆஸ்திரேலியாவை 238க்கு சுருட்டி வென்றது.

- Advertisement -

தைரியமான முடிவு:

இந்நிலையில் அந்தப் போட்டியில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த அஸ்வினை பெஞ்சில் அமர வைத்தது மற்றும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ததும் இந்தியா எடுத்த தைரியமான முடிவு என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். ஒருவேளை தாம் அப்போட்டியில் கேப்டனாக இருந்திருந்தால் முதலில் பேட்டிங் செய்து கடைசியில் தோல்வியை சந்தித்திருப்பேன் என்று குக் வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அப்போட்டியில் இந்தியா தைரியமாக இருந்தது என்று நினைக்கிறேன். அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டும் எடுத்தாலும் நாங்கள் ஆஸ்திரேலியாவை தைரியமாக சந்திக்கப் போகிறோம் என்ற செயல்முறையை பின்பற்றினார்கள். அது மிகவும் கடினம் என்பது எனக்குத் தெரியும். அது 2 அணிகளுக்குமே கடினமாக இருக்கும்”

- Advertisement -

குக் பாராட்டு:

“பின்னர் அது ஒருதலைபட்சமான ஆட்டமாக அமைந்தது. பெரும்பாலான கேப்டன்கள் அந்த மைதானத்தில் முதலில் பந்து வீசும் முடிவை எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் பொதுவாக அது போன்ற முடிவு கடைசியில் மோசமான தோல்வியை கொடுத்திருக்கும். ஆனால் இந்தியா அதை அற்புதமாக எடுத்துக் கொண்டு அனைத்து துறைகளிலும் அசத்தலாக விளையாடியது”

இதையும் படிங்க: 4 விக்கெட்ஸ்.. பாண்டியாவை கோல்டன் டக் அவுட்டாக்கிய சிஎஸ்கே வீரர் கோபால் ஹாட்ரிக்.. கலக்கல் சாதனை

“150க்கு ஆல் அவுட்டான பின் ஜஸ்ப்ரித் பும்ரா அந்த பிட்ச்சில் அபாரமாக பந்து வீசியது இந்திய அணி கம்பேக் கொடுக்க உதவியது. மேலும் 500 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினை அவர்கள் தைரியமாக கழற்றி விட்டார்கள். அஸ்வின் சிறந்த வீரர் என்றாலும் அணியாக அவர்கள் சிறப்பாக சிந்தனை செய்தார்கள். அப்படி சிந்தித்த அவர்கள் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கியதை பார்ப்பது நன்றாக இருந்தது அல்லவா?” எனக் கூறினார்.

Advertisement