இந்திய அணி அங்கேயே ஜெய்ச்சுட்டாங்க.. இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி கூட கஷ்டம் தான்.. அலெஸ்டர் குக்

Alastair Cook 7
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்று விட்டது. அதனால் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்கிய கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு டாஸ் அதிர்ஷ்டமும் கிடைத்தது.

இருப்பினும் அதை பயன்படுத்தி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி சுமாராக விளையாடி வெறும் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக ஜாக் கிராவ்லி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்ததால் இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 100/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசி அந்த அணியை சுருட்டி வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியா முடிச்சுட்டாங்க:
அதைத் தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 2வது நாள் முடிவில் 473/8 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 225 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தூத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 ரன்கள் குவித்த நிலையில் களத்தில் பும்ரா 17*, குல்தீப் யாதவ் 27* ரன்களுடன் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் முதல் நாளில் 100/1 என்ற வலுவான நிலையிலிருந்த இங்கிலாந்தை 218 ரன்களுக்கு சுருட்டிய போதே இந்தியா வெற்றியை உறுதி செய்து விட்டதாக முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார். அதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றியை பதிவு செய்வது கூட கடினம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வெற்றி இங்கிலாந்து அணியிடமிருந்து நேற்றே சென்று விட்டது. இன்றைய ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. தற்சமயத்தில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து கதவுகளையும் மூடி பூட்டி விட்டனர். அதனால் இந்த போட்டியில் இங்கிலாந்து கம்பேக் கொடுப்பதற்கான வழியே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் தோல்வி மெதுவாக வரும்”

“எனவே வேடிக்கையாக ஏதாவது நடக்காமல் இருக்கும் வரை அடுத்த 2 நாட்களில் இங்கிலாந்து அதை உணர்வார்கள். இந்திய அணியில் ஆரம்பத்திலேயே 2 அபாரமான பார்ட்னர்ஷிப் அமைந்தது. குறிப்பாக கில் 2வது நாள் காலையில் ஆக்ரோஷமாக விளையாடினார். ரோகித் சர்மா சதத்திற்காக தன்னை நிலைப்படுத்தினார். அவர் ஒரு டெஸ்ட் சதத்தை பதிவு செய்வதற்கு இது போல் நிறைய வாய்ப்புகள் கிடைக்காது என்பதை உணர்ந்து விளையாடினார். அதனால் இங்கிலாந்து பவுலர்கள் கடினமான வேலையை செய்தனர்” என்று கூறினார்.

Advertisement