IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி இவருக்குத்தான் – அக்தர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும்

Akhtar
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இருக்காது.

India v Pakistan

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளைய இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று வித்தியாசமான ஒரு பதிலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி அக்தர் பதிவிட்டதாவது : நாளை நடைபெறவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளுமே வெற்றி பெறாது. மாறாக அதற்கு பதிலாக மழையே வெற்றிபெறும் என்று வித்தியாசமாக அக்தர் பதிவிட்டுள்ளார். இதற்கு காரணம் இங்கிலாந்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையே.

Pakistan

மேலும், இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் மழையால் முழுவதுமாக நடைபெறாமல் போய் உள்ளது. அதற்கடுத்து தற்போதும் நிறைய போட்டிகள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அக்தர் இப்படி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement