பொல்லார்ட்டின் 6 சிக்ஸர் சாதனையால் காணாமல் போன இலங்கை வீரரின் அசத்தல் சாதனை – விவரம் இதோ

Dananjaya-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது அந்நாட்டுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே குவித்தது.

Pollard

- Advertisement -

அடுத்ததாக 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தொடக்கத்திலேயே அதிரடியை வெளிக்காட்டியது. சிம்மன்ஸ் 26 ரன்களும், லீவிஸ் 28 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அதன் பிறகு நான்காவது ஓவரை வீசிய இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்ஜெயா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார்.

இதில் லீவிஸ், கெயில்(0), நிக்கலஸ் பூரன்(0) ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று பொறுமையாக விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கேப்டன் பொல்லார்ட் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தனஞ்ஜெயா வீசிய 6 ஆவது ஓவரில் 6 சிக்சர்கள் பறக்கவிட்டு உலக சாதனை படைத்தார்.

பொல்லார்டின் இந்த அதிரடி ஆட்டம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டி முடிந்தவுடன் அனைவரும் பொல்லார்ட் அடித்த அந்த 6 சிக்சர்களை மட்டுமே அதிக அளவு பேசுகிறார்கள். ஏனெனில் டி20 போட்டிகளில் இரண்டாவது ஆளாக அவர் தற்போது இந்த 6 சிக்சர்கள் சாதனையை படைத்துள்ளார் .ஆனால் வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமான அணிக்கு எதிராக 4-வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இலங்கை வீரர் தனஞ்ஜெயா சாதனையை பற்றி யாரும் பேசவில்லை.

அதிலும் குறிப்பாக இவர் வீழ்த்திய மூன்று பேருமே சிறப்பான அதிரடி வீரர்களான லீவிஸ், கெயில், பூரான் ஆகிய மூவரும் எவ்வளவு பெரிய ஹிட்டர்கள் என்பது நாம் அறிந்தது. பொல்லார்டின் இந்த சிக்ஸர் சாதனையால் தனஞ்ஜெயாவின் சாதனை தற்போது காணாமல் போய் உள்ளது என்றே கூறலாம். மேலும் ஒரே போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அடுத்த ஓவரிலேயே 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement