ஸ்மித் விவகாரத்தில் ஆர்ச்சர் இப்படி செய்து இருக்கக்கூடாது. அவர் செய்தது தவறு – அக்தர் பாய்ச்சல்

Akhtar
- Advertisement -

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதன் பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வந்தது. ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்து வந்தாலும் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினார். கடைசி வரை போராடிய ஸ்மித் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் ஸ்மித் 70 ரன் எடுத்திருந்தபோது ஆர்ச்சர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அப்போது அசுரவேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்து 148 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஸ்மித்தின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அவர் அந்த பந்து பட்டதும் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அதன்பின்னர் அடிபட்ட ஸ்மித்தை ஆர்ச்சர் அருகில் சென்று கூட பார்க்கவில்லை. ஆர்ச்சரின் இந்த செயலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதோ அந்த ட்வீட் :

அதில் அக்தர் குறிப்பிட்டதாவது : பவுன்சர்கள் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான் ஆனால் பவுன்சரால் ஒரு பேட்ஸ்மென் சுருண்டு விழும் போது அவரிடம் சென்று ம் நலம் விசாரிக்க வேண்டும் ஆனால் ஸ்மித் வலியால் துடிக்கும்போது கவனிக்காமல் அந்த இடத்திலிருந்து அப்படியே வெளியேறிய ஆர்ச்சரின் இந்த செயல் மிக மோசமானது என்று அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement