இந்தியா பாகிஸ்தான் தொடர் மீண்டும் துவங்க இதுதான் ஒரேவழி. மேலும் இதுல ஒரு நல்லதும் இருக்கு – அக்தர் கொடுத்த யோசனை

Akhtar
- Advertisement -

கொரோனா வைரஸ் தாகம் காரணமாக தற்போது உலக நாடுகள் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. சீனாவில் உருவான இந்த வைரஸ் அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தற்போது குறைத்து அதிலிருந்து மீண்டு உள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பரவி தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Corona-1

- Advertisement -

அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் தப்பவில்லை என்றே கூறலாம். இந்த இரண்டு நாடுகளுக்குமே தற்போது அந்த வைரஸ் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டார்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வருடம் நடைபெற இருந்த ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 29ம் தேதியிலிருந்து தற்போது ஏப்ரல் 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்றே தோன்றுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இந்த நிலையை மாற்றுவது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Pakistan 1

அதன்படி இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் நிதி திரட்ட ஒரு யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2007-ம் ஆண்டு இரு தரப்பு தொடர் நடைபெற்றது. அதன் பின்னர் தீவிரவாத தாக்குதல் மற்றும் இரு நாடுகளின் அரசியல் பிரச்சினை காரணமாக இதுவரை 13 ஆண்டுகளாக இருதரப்பு தொடர் நடைபெறவே இல்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் இது அணிகளும் மோதிக் கொள்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிதி திரட்டும் வகையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நடத்துவதன் மூலம் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் தொடரை ஏற்படுத்தி விளையாட வைப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் நிதி திரட்ட இது ஒரு வழியாக இருக்கும் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இரு நாடுகள் விளையாடும் போது அதிக அளவில் பார்வையாளர்கள் திரள்வார்கள் என்பதால் பெரிய அளவில் நிதி கிடைக்கும்.

Pakistan

இந்த தொகையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் சரி சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு நடக்கும்போது இரு நாட்டு ரசிகர்களும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் சுமுகமான உறவு பலப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து இரு நாடுகளின் கிரிக்கெட் நிர்வாகிகளே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement