எங்களால் இது நிச்சயம் முடியாது. இந்தியா தயவுசெய்து எங்களுக்கு உதவ முன்வர வேண்டும் – அக்தர் வேண்டுகோள்

Akhtar
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அந்நாட்டில் கோர தாண்டவத்தினை நடத்தி தற்போது உலகநாடுகள் அனைத்திற்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா தப்பித்தாலும் இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரசை சமாளிக்கும் மருத்துவ வசதிகளும் உபகரணங்களும் பாகிஸ்தானில் இல்லை என்றே தெரிகிறது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது அனைத்து வகையிலும் பாகிஸ்தான் பின்தங்கியே உள்ளதால் நமது உதவி அவர்களுக்கு தேவை.

Pakistan

- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இதே நிலைமை தான். தற்போது இந்தியாவில் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா பெரிய உற்பத்தி கொண்ட நாடு என்பதால் இதனை சமாளித்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் தற்போது வரை என்ன நிலவரம் என்று பெரிதாக இருக்கும் தெரியவில்லை. 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செயற்கை சுவாச கருவிகள் வைக்கவே அந்த நாட்டிடம் போதிய உபகரணங்கள் இல்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் இந்தியாவிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Akhtar

இந்தியா எங்களுக்கு 10000 சுவாசக் கருவிகள் உருவாக்கிக் கொடுக்க முடிந்தால் அது பேருதவியாக இருக்கும். இந்த உதவியை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் அக்தர்.அவரின் இந்த வேண்டுகோளை இந்திய அணி ஏற்குமா ? என்பது தெரியாது இருப்பினும் அவரின் கருத்தாக இதனை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவரின் இந்த வேண்டுகோளுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்தாலும் இந்திய அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ளுமா ? என்பது தெரியாது. இருப்பினும் இது ஒரு நல்ல காரியத்திற்கான கோரிக்கை என்பதனால் அதற்கு செவி கொடுத்தால் நல்லது என்றும் பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Pak-1

ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரினை கொரோனா நிதியுதவி திரட்டும் வகையில் நடத்தலாம் என்று அக்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement