IND vs PAK : பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு செல்ல இந்தியாவே வழிவகுக்கும் – அக்தர்

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு

Akhtar
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி வாய்ப்பு குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் ஏனெனில் இரண்டு போட்டிகளில் மீதமுள்ளன அதில் அடுத்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை சந்திக்கிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து அணியை ஒருவேளை இந்திய அணி வீழ்த்தினால் அது பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும். ஏனெனில் இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தோற்றால் அவர்கள் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை இழக்கும் நிலைக்கு வருவார்கள்.

Babar

மேலும் பாகிஸ்தான் அணி அடுத்து வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மோத உள்ளதால் அந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும். அவ்வாறு பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால் இந்தியா பாகிஸ்தான் மோதும் நிலை வந்தால் அதில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று அக்தர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement