நீங்க நெனைக்குற அளவுக்கு அவரு ஒன்னும் பெரிய ஆளு இல்ல – இங்கி வீரரை விளாசிய அக்தர்

Akhtar
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடைபெறவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் ஜூலை 8 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த முதல் தொடரில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் ஜூலை 8-ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் துவங்குகிறது.

wivseng

- Advertisement -

இந்த தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஒரு மாதம் முன்னரே இங்கிலாந்து சென்றடைந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்து இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இன்று புறப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் என்றாலும் ஒரு மாதம் முன்னதாக புறப்பட்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட்டு பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இந்த தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான பேட்டிங் பயிற்சியாளரான யூனிஸ்கான் இந்த சுற்றுப்பயணம் குறித்து தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Younis 2

இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஆர்ச்சர் உண்மையான மேட்ச் வின்னர் மேலும் அவர் மிகச்சிறந்த பவுலர். உலக கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவரை அருமையாக வீசினார். அவரது பௌலிங் ஆக்சன் மிக சிறப்பு. மிரட்டலான வேகத்தில் பந்து வீசிய கூடியவர். அவர் மீது உள்ள எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து இருப்பதாலும் கூடுதல் நெருக்கடி அதிகமாக இருக்கும்.

- Advertisement -

அதே போன்று அவரது இன்ஸ்விங்கில் அவுட் ஆகி விடாமல் தப்பிப்பதற்கான ஆலோசனைகளை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கியிருக்கிறேன். இந்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இவரை சுதாரித்து விளையாடினால் போதும் என்று யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.

Archer

இந்நிலையில் யூனிஸ்கான் இந்த கருத்து குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறுகையில் : என்னை பொறுத்த வரையில் அவரைப் பார்த்து பயப்பட வேண்டிய தேவையில்லை. அவரின் பவுலிங்கை தடுத்து ஆட வேண்டும் என்று யூனிஸ்கான் வீரர்களுக்கு தெரிவித்தாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை கண்டிப்பாக அவர் சொல்லி இருந்தால் அதை செய்யக்கூடாது என்று அக்தர் கூறியுள்ளார்.

ஏனெனில் நாம் அடித்து ஆடினால் மட்டுமே அவரின் பந்துவீச்சை எளிதாக சமாளிக்க முடியும். பேட்ஸ்மேன்கள் தங்களை காத்துக் கொள்ள நினைத்தால் அது அவசியம் அதுவும் இங்கிலாந்து கண்டிஷனில் அவரின் பந்துவீச்சு மேலும் மிரட்டலாக இருக்கும் அதனால் அவரை அடித்து ஆட வேண்டும் என்று அக்தர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement