இப்படி தொப்பை இருந்தால் எப்படி ரன்னிங் ஓடுவது. நட்சத்திர வீரரை வெளுத்து வாங்கிய – அக்தர்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் ஆடி வருபவர் ஷர்ஜீல் கான். இவர் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவருக்கு பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

Sharjeel 2

- Advertisement -

பாபர் அசாமுடன் கராச்சி அணியின் துவக்க வீரராக களமிறங்கும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் அற்புதமாக ஆடி தனது அணிக்காக வெற்றிகளை குவித்து வருகிறார். இந்நிலையில் லாகூர் அணிக்கு எதிரான போட்டியில் 151 ரன்கள் இலக்கினை இந்த இருவரும் விக்கெட் இழப்பின்றி அடித்து அசத்தினார்கள்.

இந்த போட்டியில் 59 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி ஸர்ஜீல் கான் 74 ரன்களை குவித்தார். இவ்வாறு பேட்டிங் நன்றாக ஆடினாலும் அவரது உடலிலும், பிட்னசிலும் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தானிய முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ஸோயப் அக்தர் கூறியதாவது… சர்ஜீல் கான் திறமையான பேட்ஸ்மேன் தான். அவர் அரைசதம் அடித்து அற்புதமாக ஆடினாலும் அவரால் 1 மற்றும் 2 ரன்கள் ஓட முடிவதில்லை.

- Advertisement -

இதுவரை மூன்று அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். அவர் தனது தொப்பையை குறைத்து ஃபிட்டாக வேண்டும். அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடிப்பதற்கு நேரம் இருக்கிறது. இதில் கவனம் செலுத்தி தனது உடற்கட்டை மேருகேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் சோயப் அக்தர்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பாராஸ் அகமது உடற்தகுதி குறித்தும் அக்தர் தனது கருத்தினை வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கினார். மேலும் தொடர்ந்து இந்திய வீரர்களை புகழ்ந்தும், பாகிஸ்தான் வீரர்களை விமர்சித்தும் அக்தர் தனது கருத்துகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement