சேவாக் மட்டும் அன்னைக்கு அப்படி பேசி இருந்தால் மைதானத்திலேயே அடி வாங்கியிருப்பார் – அக்தர் ஆவேசம்

Akhtar
- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே எப்போது போட்டி நடந்தாலும் பரபரப்பாகவே இருக்கும். ஆட்டத்திலும் வாய் வார்த்தைகள் அதிகமாக இருக்கும். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர ஷேவாக், கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சாகித் அப்ரிடி போன்ற வீரர்களை வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள்.

Akhtar 1

- Advertisement -

அதேபோன்று அவர்களது பந்தில் தங்களது விக்கெட்டையும் இழந்து இருக்கிறார்கள். இதனை வைத்து சமீபத்தில் விரேந்தர் சேவாக் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அதாவது..
நான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் அடிக்க நெருங்கிக் கொண்டிருந்தேன். அப்போது சோயப் அக்தர் எனக்கு நிறைய பவுன்சர் பந்துகளை வீசினார்.

அதற்கு நான் உடனடியாக கடுப்பாகி சச்சின் டெண்டுல்கரை காட்டி, உனது தந்தை அங்கே இருக்கிறார் அவருக்கு பவுன்சர் வீசு என்று கூறினேன். அதேபோல் சச்சின் டெண்டுல்கருக்கு பவுன்சர் வீசினார். அதனை சச்சின் டெண்டுல்கர் சிக்சர் அடித்தார். உன்னால் உன் தந்தையை மிஞ்ச முடியாது என்று பதிலடி கொடுத்தேன் என்று சேவாக் கூறியிருந்தார்.

sehwag-sachin
.
தற்போது இதனை வைத்து பேசியிருக்கிறார் சோயப் அக்தர். அது போன்ற ஒரு சம்பவம் நடக்கவில்லை. அந்த மாதிரியான சம்பவம் நடந்திருந்தால் நான் சும்மா விட்டிருக்க மாட்டேன். அவரை களத்திலேயே அடித்து நொறுக்கி இருப்பேன், ஹோட்டல் வரை அடித்து இழுத்துச்சென்று தூக்கி வீசி இருப்பேன் என்று பேசியுள்ளார் சோயப் அக்தர்.

இவர் கூறுவது உண்மைதான் போலிருக்கிறது. சேவாக் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஏனெனில் சேவாக் இரட்டை சதம் அடித்த போது சச்சின் டெண்டுல்கர் ஒரு சிக்சர் கூட அடித்ததில்லை. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சேவாக் இரட்டை சதம் அடித்த போது சச்சின் டெண்டுல்கர் அந்த போட்டியில் பேட்டிங் பிடிக்கவே இல்லை.

Akhtar

அதே போல் 2007 ஆம் ஆண்டு ஷேவாக் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த போது அக்தர் அந்த போட்டியில் ஆடவில்லை. இப்படிப் பார்த்தால் அக்தர் கூறுவ உண்மைதான் போலிருக்கிறது விரேந்தர் சேவாக் விளம்பரத்திற்கு என்று பொய் கூறி உள்ளார் என்று தெரிகிறது.

Advertisement