சச்சினுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா. நான் அவ்ளோதான் என் கதை முடிஞ்சிச்சு – அக்தர் பகிர்ந்த சுவாரசியம்

Akhtar

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே எப்போதும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய கொண்டாட்டமாகவே அமையும். கடந்த பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடி தொடரில் மோதாமல் இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இரு அணிகளும் இருநாட்டு தொடரில் மோதிக்கொள்ளும் போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர் உடன் ஏற்பட்ட ஒரு நிகழ்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

akhtar

இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தானுக்கு அடுத்து என் மீது அதிக அன்பை காட்டும் ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான் விளையாடிய தருணங்கள் பல எனக்கு இன்றளவும் நினைவில் இருக்கின்றன. 2007ஆம் ஆண்டின் போது ஒரு போட்டியில் விளையாடி முடித்த பிறகு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

- Advertisement -

அப்போது சச்சினுக்கு விருது கொடுத்த உடன் நான் மகிழ்ச்சியில் அவரை தூக்கினேன். சச்சினும் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் தூக்கி முடித்த பின் என்னால் சரியாக பேலன்ஸ் செய்யமுடியாமல் அவரை விட்டு விட்டேன். சச்சினும் தவறி கீழே விழுந்துவிட்டார். அப்போது மட்டும் சச்சினுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருந்தால் என்னை ரசிகர்கள் மீண்டும் நாடு திரும்ப அனுமதித்திருக்க மாட்டார்கள். என்னை அன்றோடு கொளுத்தி இருப்பார்கள் என்று நினைத்தேன்.

sachin

ஆனால் கீழே விழுந்தும் சச்சின் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தார். மேலும் மருத்துவர்களும் அவருக்கு எந்தவித காயமும் இல்லை என்று கூறினர். அதன் பின்னரே எனக்கு நான் திருப்தி அடைந்தேன். மேலும் அந்த நிகழ்வு நடந்த பின்னர் சச்சினிடம் சென்று நான் தவறு செய்துவிட்டேன் உங்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டு விட்டதா ? என்று கேட்டேன்.

- Advertisement -

sachin 1

சச்சினும் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார். அவருக்கு மட்டும் அன்று காயம் ஏற்பட்டிருந்தால் என் நிலைமையை நான் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு ஏதாவது ஒன்று நடந்திருக்கும் என சச்சின் குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement