மின்னல் வேகத்தில் பந்துவீசும் சோயிப் அக்தருக்கு காலில் இப்படி ஒரு பிரச்சனையா – அவரே பகிர்ந்த தகவல்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் சோயப் அக்தர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுபவர். 21-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலக கிரிக்கெட்டில் ஆட்சி செய்த ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், பிரெட் லீ, இலங்கையின் சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஆகியோர் வரிசையில் பாகிஸ்தானில் இருந்து உலகின் டாப் பேட்ஸ்மேன்களை கூட திணறடிக்கும் பந்துவீச்சாளராக அவர் ஜொலித்தார்.

Akhtar 1

- Advertisement -

சொல்லப்போனால் அதிவேகமான பந்துகளை வீசுவதில் கிளென் மெக்ராத், பிரெட் லீ ஆகியோரையும் மிஞ்சிய அவரின் பந்துகளை எதிர்கொள்வதற்கு பல தரமான பேட்ஸ்மேன்கள் கூட சற்று பயப்படுவார்கள் எனக் கூறலாம். ஒரு எக்ஸ்பிரஸ் போல அதிரடியாக பந்துவீசும் வல்லமை படைத்த அவரை “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.

வேகத்தில் உலகசாதனை:
அந்த சமயங்களில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற பேட்ஸ்மேன்கள் பல ஆயிரம் ரன்களை குவித்து சதங்களை அடித்து உலக சாதனை படைத்தனர். அதேபோல் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோர் தங்களது மாயாஜால சுழல்பந்து வீச்சில் கொத்துக் கொத்தாக விக்கெட்டுகளை அள்ளி உலக சாதனை படைத்தனர்.

Shoaib Akhtar Sachin Tendular

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக அதிவேகமான பந்தை வீசி உலக சாதனை படைக்க முடியும் என உணர்ந்த சோயப் அக்தர் அதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த நாளிலிருந்து முயற்சி செய்து வந்தார். இறுதியில் கடந்த 2003-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 கிலோ மீட்டர் வேகத்திலான பந்தை வீசிய அவர் மாபெரும் உலக சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே சச்சின், சேவாக் உள்ளிட்ட தரமான பேட்ஸ்மேன்களை கண்டால் வேண்டுமென்றே அதிவேகத்துடன் கூடிய பவுன்சர் பந்துகளை வீசி போட்டியில் அனல் பறக்க விடுவதை அவர் மிகவும் விரும்புவார்.

- Advertisement -

எழுந்து நடக்க முடியாது எனக்கூறிய டாக்டர்:
சொல்லப்போனால் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான வேகத்தில் பந்து வீசும் ஒரு மின்னல் வேக பவுலரை பார்க்க முடிவதில்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு வேகமாக ஓடிவந்து அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு பெயர் போன அவரை சிறுவயதில் எழுந்து நடக்கக் கூட முடியாது என ஒரு மருத்துவர் எச்சரித்த பின்னணியை பகிர்ந்துள்ளார்.

Akhtar 1

இதுபற்றி ஆஸ்திரேலியாவின் பிரபல தி ஏஜ் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “தினமும் காலை பாத்ரூமில் வலியால் ஊர்ந்து செல்வதைப் போல் நான் நடப்பேன். இப்போதும் கூட எனது கால்கள் லாக் ஆகிவிட்டன. இந்த மாதிரியான வலியில் தான் எனது கிரிக்கெட் கேரியர் ஆரம்பமானது. சொல்லப்போனால் 1999-ஆவது வருடமே நான் வலியில்லாமல் இருந்த வருடமாகும். எனது 6 வயது வரை என்னால் சரியாக நடக்கக் கூட முடியாது.

- Advertisement -

அந்த நேரத்தில் என்னை சோதித்த மருத்துவர் எனது அம்மாவிடம் “இந்த சிறுவன் பாதி ஊனத்தை போன்றவன். இவனால் மற்ற குழந்தைகளை போல வேகமாக ஓட முடியாது என கூறினார்”. அந்த சமயத்தில் எனது மூட்டு எலும்புகளில் ஏற்பட்ட வலியை இப்போது நினைத்தாலும் கூட கடினமாக இருக்கிறது” “அதன்பின் ஐஸ் குளியல் போட்டுவிட்டு உறங்க கற்றுக்கொண்டேன். அந்த சமயங்களில் எனது சக வீரர்கள் “மணி காலை 4 ஆகிவிட்டது சீக்கிரம் எழுந்திரு” என அடிக்கடி என்னை எழுப்புவார்கள்.

Akhtar 2

அந்த தருணங்களில் எனது காயத்தை மறைக்க முயற்சி செய்தேன். ஏனென்றால் எனது ஆரம்ப நாட்களில் கிரிக்கெட்டில் விளையாட ஏகப்பட்ட போட்டி நிறைந்திருந்தது. மேலும் எதற்காக நான் அடிக்கடி விளையாடுவதில்லை என்பது பற்றி ஊடகங்கள் விவாதித்தன” என கூறினார்.

- Advertisement -

கணிப்பை பொய்யாகிய அக்தர்:
இயற்கையாகவே பிறக்கும் போதே சோயப் அக்தரின் மூட்டுப் பகுதிகளில் குறைபாடுகள் இருந்ததை கண்டறிந்த மருத்துவர் அவரால் மற்றவர்களைப் போல அதி வேகமாக ஓட முடியாது என அவரின் அம்மாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாத அவர் கிரிக்கெட் மீது இருந்த காதல் காரணமாக தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு நாளடைவில் உலகையே மிரட்டும் அதிரடியான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து பல சாதனைகளைப் படைத்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : சென்னை, மும்பை என 5 முக்கிய அணிகளில் நிலவும் முக்கிய பிரச்சனைகளும் தீர்வுகளும்

மொத்தத்தில் சிறு வயதில் எழுந்து நடக்க கூட மாட்டார் என கணித்த மருத்துவரின் கணிப்பை பொய்யாக்கிய சோயப் அக்தர் இன்று உலகிலேயே அதி வேகமான கிரிக்கெட் பந்தை வீசி உலக சாதனை படைத்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்க அம்சமாகும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 444 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் கிரிக்கெட் இருக்கும் வரை ஒரு மகத்தான வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற போதிலும் இன்னும் கூட தினமும் வலியை உணர்வதாக தெரிவித்துள்ள சோயப் அக்தர் அதற்காக விரைவில் மெல்போர்ன் நகரில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.

Advertisement