இந்திய அணியின் அணியில் எனது பந்துவீச்சை தைரியமாக ஆடியவர் இவர்தான் – அக்தர் ஓபன் டாக்

Akhtar
- Advertisement -

சமீபகாலமாக பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இந்திய வீரர்களை பற்றி அதிகம் பேசி வருகிறார். குறிப்பாக அவரது காலத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக் ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் சந்தித்த பேட்ஸ்மேன்களிலேயே பயம் இல்லாத ஒரே ஒரு பேட்ஸ்மேன் தற்போது பேசியுள்ளார்.

Akhtar

- Advertisement -

இவரது, காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், குமார் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, ஜாக் காலிஸ், க்ரேம் ஸ்மித், ஏபி டிவில்லியர்ஸ் மகேந்திரசிங் தோனி ஆகியோர் சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் எதிராக சிறப்பாக பந்து வீசியவர் சோயப் அக்தர்.

இந்நிலையில் தனது பந்துவீச்சினை பயமில்லாமல் சந்தித்த இந்திய பேட்ஸ்மேன் குறித்து தற்போது அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சவுரவ் கங்குலி எனது பந்து வீச்சை எதிர்கொள்ள என்றுமே பயப்பட்டது இல்லை. நான் பார்த்ததிலேயே மிகவும் துணிச்சலான பேட்ஸ்மேன் அவர்தான்.

Ganguly

அனைத்து விதமான ஷாட்களையும் அவரால் ஆட முடியாது .ஆனால் எப்போதும் நான் வீசும் பந்தை அடித்து விடலாம் என்று தான் பார்ப்பார். நான் எப்போது பவுன்சர் வீசினாலும் துணிச்சலாக எதிர்கொண்டு அதனை அடித்துவிடுவார். இந்திய அணிக்கு கிடைத்த மிகவும் துணிச்சலான கேப்டனும் அவர்தான்.

கங்குலி கேப்டன் ஆவதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆடும் போதெல்லாம் திணறிக்கொண்டிருக்கும். அவர்தான் இந்திய அணியின் பார்வையையே மாற்றிவிட்டார் என்று புகழ்ந்து பேசியுள்ளார் சோயப் அக்தர். அக்தரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement