இந்திய அணி எப்படி நடந்து கொள்கிறது. அதை பார்த்து கத்துக்கோங்க – அக்தர் விளாசல்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடி வருகிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் வீரர் இவர் தற்போது ஒரு யூடியூப் பக்கத்தை நடத்தி அதில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

Akhtar

- Advertisement -

யூடியூப் பக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து கடுமையாக சாடியுள்ளார் சோயப் அக்தர். இதுகுறித்து அவர் கூறியதாவது : உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணியின் சிறந்த முன்னாள் வீரர்களை பணிக்கு அமர்த்தி கிரிக்கெட் வாரியத்தை சரியாக நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவ்வாறு செய்வதில்லை.

சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். ராகுல் டிராவிட் இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைமை வகிக்கிறார். க்ரீம் ஸ்மித் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை வகிக்கிறார். மார்க் பவுச்சர் அந்த அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். உலகம் முழுவதும் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது.

dravid

ஆனால் இவற்றிற்கெல்லாம் மிக எதிர்மறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடந்து கொண்டிருக்கிறது. என்னை போன்ற வீரர்களின் வேலை டிவி நிகழ்ச்சிகளில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் என்னை கிரிக்கெட் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்க அனுமதிக்க வேண்டும்.

- Advertisement -

பாகிஸ்தான் அரசு கிரிக்கெட் வாரியத்தை கைவிட்டுவிட்டது என்று நினைக்கிறேன். இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார் சோயப் அக்தர். மேலும் அவ்வப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தினையும், இந்திய வீரர்களையும் புகழ்ந்த வண்ணம் பேசி வருகிறார். அவ்வாறு அவர் பேசி வருவது பாகிஸ்தான் ரசிகரகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Akhtar

மேலும் தொடர்ந்து இவ்வாறு பேசிவருவது கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி ரசிகர்கள் இடையுமே பெரும் புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement