இந்திய அணியின் பந்து வீச்சாளரான இவர் ரிவர்ஸ் ஸ்விங் ராஜாவாக வலம் வருவார் – அக்தர் நம்பிக்கை

Akhtar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

Pujara

அதேபோல பந்துவீச்சில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சாளரான முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்திய அணி குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் சோயப் அக்தர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : விராட் கோலி போன்ற கேப்டன்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்படுவதால் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இன்னொரு படி அதிகரிக்கும். மேலும் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும்போது அவர் அதனை ரசித்து வரவேற்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு கேப்டன் இருப்பது இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி என்னிடம் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியின் தோல்விக்குப் பிறகு தொலைபேசியில் பேசினார். அப்போது என்னால் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாட முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார். உடனே நான் அவருக்கு அறிவுரை வழங்கினேன். தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்கள் நீங்கள் மட்டுமே சிறப்பாக ரிவர்ஸ் ஸ்விங் வீசி வருகிறீர்கள்.

Shami

உங்களால் நிச்சயம் இந்திய துணைக்கண்ட ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீச முடியும் உங்களுடைய ரிவர்ஸ் ஸ்விங் உங்களுக்கு கிடைத்த ஒரு அற்புத பரிசு. எனவே நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங் ராஜாவாக வலம் வருவீர்கள் என்று நான் ஷமிக்கு அறிவுரை வழங்கி இருந்தேன். கண்டிப்பாக அவரால் பந்து வீச்சுக்கு சாதகமற்ற ஆடுகளத்தில் கூட சிறப்பாக பந்து வீச முடியும். அவர் நிச்சயம் உலகநாடுகளை ரிவர்ஸ் ஸ்விங் மூலம் மிரட்டுவார் என்று அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement