டி20 உ.கோ : இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இருந்து பைனலுக்கு வந்தாலும் அந்த அணியிடம் தோத்துடும் – அக்தர் நக்கல்

Akhtar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரானது இந்திய அணிக்கு சற்று சுமாரான தொடராக அமைந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது சூப்பர் 12-சுற்றின் முதல் 2 போட்டிகளிலும் படு மோசமான தோல்வியை சந்தித்ததால் ரன் ரேட்டிலும் பெரிய சரிவைச் சந்தித்தது.

ashwin

- Advertisement -

அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக மிகப் பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று ரன் ரேட்டை உயர்த்தினாலும் இந்திய அணி தற்போது அரையிறுதிக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இல்லையெனில் இந்த தொடரின் கடைசி போட்டியில் நமீபியா அணியோடு விளையாடி விட்டு வெளியேற வேண்டிய நிலைதான் ஏற்படும். இந்நிலையில் இந்த தொடரில் எப்படியாவது இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அந்த போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் மீண்டும் அவர்கள் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திப்பார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

Hafeez

இதுகுறித்து அவர் கூறுகையில் : தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டிய அணி தான். அப்படி இந்தியா தகுதி பெற்றாலும் பாகிஸ்தான் அணி மீண்டும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை தோற்கடிக்கும். இதுதான் கிரிக்கெட்க்கும் நல்லது. உலகக்கோப்பை தொடரின் சுவாரசியத்தை இன்னும் அது அதிகரிக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னது நான் ரிட்டயர்டு ஆயிட்டனா ? ச்சேன்ஸ்ஸே இல்ல – விளக்கத்தை கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய கெயில்

இந்திய அணியின் உலக கோப்பை பயணம் இன்னும் முடிவடையவில்லை. ஒருவேளை அவர்கள் இறுதிப்போட்டிக்கு வந்தாலும் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி சந்திப்பார்கள் என அக்தர் கூறியுள்ளார். எப்போதும் இது போன்று சமூக ஊடகத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து வரும் அக்தர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இந்திய அணியை குறைத்துப் பேசி உள்ளதால் அவர் மீது விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement