சேவாக் மாதிரி வந்து இருக்க வேண்டியர். பாவம் மூளை இல்லாததால கிரிக்கெட் விளையாட முடியாம போச்சு – அக்தர் வருத்தம்

Akhtar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் அதில் அதிரடியாக அடித்து ஆடக்கூடியவர் சேவாக். கிட்டத்தட்ட முதல் 10 ஓவர்களில் விரேந்தர் சேவாக் பெரிய ஸ்கோர் எடுத்து கொடுப்பவர். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் நிதானமாகத்தான் ஆடவேண்டும் என்ற பாரம்பரிய மரபை அடித்து நொறுக்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடுவது சாத்தியம் என்று நிரூபித்தவர் அவர்.

Sehwag 1

- Advertisement -

டேவிட் வார்னர் போன்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என அனைத்து சாதனைகளையும் படைத்துள்ளார். இந்நிலையில் ஷேவாக்கை விட பாகிஸ்தான் அணியின் இம்ரன் நசீர் தான் திறமையான பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் உளறிக் கொட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

சேவாக்கை விட இம்ரான் நசீர் திறமையான பேட்ஸ்மேன். ஆனால் சேவாக் அளவிற்கு அவருக்கு மூளை இல்லை. பேட்டிங் திறமையின் அடிப்படையில் பார்த்தால் இம்ரன் நசீர் மிகவும் திறமையானவர். இந்தியாவிற்கு எதிராக அவர் ஒரு சதம் அடித்த போது அவருக்கு பாகிஸ்தான் அணியில் நிரந்தர இடம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டுகொள்ளவில்லை.

Nazir

அருமையான பேட்ஸ்மேன், அனைத்து விதமான ஷாட்களையும் ஆடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் நாசம் செய்துவிட்டது. என்று கூறியுள்ளார்.

Nazir 1

இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடி உள்ளார். 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்கள் 427 ரன்கள் 79 ஒருநாள் போட்டிகளில் ஆடி இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் என 1895 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கிரிக்கெட் குறித்து பல கருத்துக்களை கூறிவரும் அக்தர் தற்போது கூறியுள்ள இந்த கருத்தும் ரசிகர்களிடையே விமர்சனையான கருத்துக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement