நான் வீழ் முடியாத ஒரே வீரர் என்றால் அது இவர்தான். இவரை நான் அவுட் ஆக்கியதே இல்லை – அக்தர் வெளிப்படை

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் உருவாக்கிய அதிவேகப் பந்து வீச்சாளர்களில் சோயப் அக்தரும் ஒருவர். உலகிலேயே மிக அதிவேகமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி சாதனை படைத்தவர். இந்த சாதனையை தற்போது வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. இவரது காலகட்டத்தில் இவரது வேகம் மூலம் பல ஜாம்பவான் பேட்ஸ்மேன்களை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Akhtar

இவ்வாறு விக்கெட் வீழ்த்தி விட்டு தற்போது அதனை சுய தம்பட்டம் அடித்து கடந்த சில மாதங்களாக தனது கிரிக்கெட் அனுபவங்களை கூறி வருகிறார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற வீரர்களை நான் வீழ்த்திவிட்டேன். அவர்களைவிட நான் திறமை வாய்ந்தவர் என்பது போல் தொடர்ந்து பேசி வருகிறார். மேலும் இந்திய மக்களின் கவனத்தை எவ்வாறு ஈர்ப்பது என்பதை யோசித்து செயல்பட்டு வருகிறார் போலும்.

- Advertisement -

அவரது பேச்சுக்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் தான் வீழ்த்த முடியாத ஒரு பேட்ஸ்மேன் பற்றி பேசியுள்ளார் சோயப் அக்தர். இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் எனது அணி வீரர் தான். ப்ரெட் லீ வீசுவதை விட நான் மிகவும் சிக்கலாக பந்து வீசுவேன். ஆனால் கடந்த 10 வருடங்களாக இன்சமாம் உல் ஹக் அவருக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசியும் அவரது விக்கெட்டை என்னால் எடுக்க முடியவில்லை.

Inzamam

மற்ற பேட்ஸ்மேன்களை விட எனது பந்துவீச்சை அவரால் துல்லியமாக கணித்து விடமுடியும்.
எனது பந்து வீச்சினை தென்னாப்பிரிக்காவின் மார்ட்டின் குரோவ் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார் .அவர் ஒரு மேஜிக் மேன். இந்திய பேட்ஸ்மேன்களின் ராகுல் டிராவிட் மிகவும் ஸ்டைலான பேட்ஸ்மேன்.

Inzamam 1

அவரது தடுப்பு ஆட்டத்தை என்னால் ஊடுருவ முடிந்ததில்லை. ஆனால் இன்சமாம் உல் ஹக்கின் விக்கெட்டை என்னால் தற்போது வரை எடுக்க முடிந்தது இல்லை என்று கூறியுள்ளார் சோயப் அக்தர். அக்தர் தொடர்ந்து இதேபோன்ற கருத்துக்களை தற்போது அளித்துக்கொண்டே வருகிறார். அவரின் ஒவ்வொரு கருத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் அதேசமயம் எதிர்மறையான கருத்துக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement