இங்கிலாந்து அணியின் வெற்றியை தடுக்க வேண்டும் என்றால் இவரால் மட்டுமே முடியும் – அக்தர் பேட்டி

Akhtar

உலக கோப்பை தொடர் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

eng vs nz

தற்போது நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இன்று நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெல்லும் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இந்த உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும். ஏனெனில் அந்த அணி ஒரு மிகப்பெரிய அணியாக தற்போது திகழ்கிறது. மேலும் சொந்த நாட்டில் நடப்பதால் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு ஏராளமாக இருக்கும். எனவே இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன்.

அதனைப் போன்று இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றியை தடுக்க வேண்டும் என்றால் அது நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் குப்தில் நினைத்தால் மட்டுமே முடியும். ஏனெனில் இந்த தொடரில் அவர் பெரிதாக எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. இந்த இறுதிப் போட்டியில் அவர் அதிரடியாக ஆடினால் கண்டிப்பாக நியூஸிலாந்தின் மிடில் ஆர்டர் அவருக்கு கைகொடுத்து பெரிய இலக்கினை அடைய உதவும்.

- Advertisement -

Williamson

இதனால் இங்கிலாந்தை அவர்கள் தடுத்து நிறுத்தி இந்த இறுதி போட்டியில் அவர்களை வீழ்த்தவும் வாய்ப்புள்ளது என்றும் எனவே குப்திலிடம் இருந்து சிறப்பான ஆட்டம் என்று வெளிப்பட்டால் நியூசிலாந்து அணிக்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என்று அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.