என் பவுன்சர்ல இவர் அடிவாங்கி கீழே விழுந்ததும் செத்துட்டார்னே நெனச்சேன் – திகில் அனுபவத்தை பகிர்ந்த அக்தர்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் சோயிப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு புயல் என்று வருணிக்கப்படும் இவர் அசுரத்தனமான வேகத்தில் பந்துவீசுவதில் பெயர் போனவர். எப்போது பந்து வீசினாலும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறையாமல் பந்து வீசுவார்.

Akhtar 1

இவரது காலத்தில் ஆடிய சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், விரேந்தர் சேவாக், டிராவிட், ஜெயசூர்யா ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். அவர்களது விக்கெட்டையும் அக்தர் வீழ்த்தியிருக்கிறார். மேலும் எப்போது பார்த்தாலும் எதிரணி வீரர்களை சீண்டிக் கொண்டே இருப்பார். வேகமாக வந்து பவுன்சர் பந்து வீசி அவர்களை நிலைகுலைய வைப்பார் .

- Advertisement -

இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒருவருக்கு அசுரத்தனமான பவுன்சர் பந்து வீசி அவரை தாக்கி இருக்கிறார் சோயிப் அக்தர். இதுகுறித்து தற்போது அவர் கூறுகையில் …

akhtar 1

கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய போது நடந்த சம்பவம் ஒன்று எனக்கு நினைவிருக்கிறது கவுண்டி போட்டியின்போது வெளிச்சம் குறைவாக இருந்தது. இந்த வெளிச்சத்தில் எனது வேகப்பந்து வீச்சை உங்களால் சரியாக கணித்து ஆட முடியாது என்று பேட்ஸ்மேன் இடம் கூறினேன். ஆனாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

Akhtar 2

அவர் இதன் காரணமாக வேகமாக வந்து அவர் மீது ஒரு பவுன்சர் பந்து வீசினேன் . அந்த பந்து அவரது முகத்தை தாக்கியது. முகத்தில் அடி வாங்கிய உடன் அவர் நிலைகுலைந்து ஸ்டம்பின் மேல் விழுந்தார். அதனை பார்த்து அவர் செத்துப் போய்விட்டார் என்று நினைத்தேன். இதுபோன்று பந்துகளை வீசி விட்டு நான் வருந்தி இருக்கிறேன் என்று தற்போது பேசியிருக்கிறார் சோயிப் அக்தர்.

Advertisement