பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா இவரை போட்டா தான் சரியா இருக்கும் – சோயிப் அக்தர் கருத்து

Akhtar

பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பி.எஸ்.எல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்த இங்கிலாந்து தொடரில் அனுபவமற்ற அந்த இளம் வீரர்களை கொண்ட அணியை நிச்சயம் பாகிஸ்தான் அணி வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

pak vs eng

ஆனால் நடைபெற்று முடிந்துள்ள 2 ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் சேஸிங்கில் 56 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் இந்த பொறுப்பற்ற ஆட்டம் பலரையும் கோபப்படுத்தி உள்ளது. ஏற்கனவே அந்த அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் வீரர்களை விமர்சித்திருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமை முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : இனிமேல் பாபர் அசாம் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட வைக்க வேண்டும்.

ஏனெனில் கேப்டனாக வேறு வீரர் இருந்தால்தான் அவரிடம் இருக்கும் பேட்டிங் திறனில் அழுத்தம் இருக்காது. கேப்டன்சி, பேட்டிங் இரண்டுமே அவருக்கு அழுத்தம் கொடுப்பதால் தான் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. எனவே அவரிடம் இருந்து கேப்டன்சி மாற்றம் வேண்டுமெனில் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலியிடம் வழங்கலாம். ஏனெனில் அவரிடம் நல்ல ஸ்பார்க் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவை உள்ளது. அவர் போட்டியில் எப்பொழுதும் முழுமையாக தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

- Advertisement -

Hasan-Ali

இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மாறினால் அது அணிக்கு நல்ல விடயமாக அமையும். மேலும் பாபர் அசாம் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தி ரன்களை குவிப்பார் என அக்தர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் வலிமையான அணியாக திகழ்ந்து வந்த பாகிஸ்தான் அணி சமீபத்தில் வலுவிழந்து விளையாடி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement