உலகக்கோப்பை தொடரை இந்திய அணியே வெல்லும். அதன் காரணம் இதுதான் – சோயிப் அக்தர் கணிப்பு

Akhtar
Advertisement

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

pandya

இந்நிலையில் உலக கோப்பையை இந்திய அணியே வெல்லும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் அரையிறுதி போட்டியில் மோத உள்ளது.

- Advertisement -

இருப்பினும் இதுபோன்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடும் போது அவர்களுக்கு அழுத்தத்தை தாங்க முடியாது. ஆனால் இது போன்ற முக்கிய போட்டிகளில் இந்திய சரியாக விளையாடி இறுதிப்போட்டியில் முன்னேறுவதில் வல்லவர்கள். எனவே இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றும் என்று நம்புகிறேன்.

rohith
ஏனெனில் தற்போது ரோஹித் பிரம்மாண்டமான பார்மில் உள்ளார். மேலும் தற்போது ராகுலும் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்து உள்ளதால் பேட்டிங்கில் இந்திய அணி ஜொலிக்கும் மேலும் பந்துவீச்சில் பும்ரா, ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் என பலரும் கலக்கி வருவதால் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன் என்று அக்தர் கூறினார்.

Advertisement