கங்குலி பிரதமர் போன்றவர். அவரது செயல் மூலம் ஐ.சி.சி இந்தியாவை திரும்பி பார்க்கும் – அக்தர் புகழாரம்

Akhtar
- Advertisement -

கங்குலி பிசிசிஐயின் அடுத்த புதிய தலைவராக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி பிசிசிஐயின் தலைவராக 23ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

Ganguly

- Advertisement -

கங்குலியின் இந்த புதிய பதிவிற்காக பல கிரிக்கெட் வீரர்களும் , நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : கங்குலியும் எங்கள் நாட்டின் பிரதமரான இம்ரான் காணும் ஒரே மாதிரி எண்ணத்தை உடையவர்கள்.

எப்படி என்றால் இவர்கள் இருவருமே புதிய திறமைசாலிகளை அணிக்கு கொண்டு வருவதிலும் இளம் வீரர்களை ஊக்குவித்து அவர்களை மிகப் பெரிய வீரராக உருவாக்குவதிலும் எப்பொழுதும் தங்களது கண்ணோட்டத்தை வைத்திருப்பார்கள். மேலும் அவ்வாறு கங்குலி கண்டெடுத்த சேவாக், ஹர்பஜன், யுவராஜ் மற்றும் ஜாகீர் கான் போன்ற வீரர்கள் இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக வலம் வந்தனர்.

ganguly

இந்நிலையில் தற்போது பிசிசிஐயின் புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்றால் இந்திய அணி நிர்வாகம் பல மேம்பாடுகளை அடையும். மேலும் கங்குலியின் சிறப்பான நிர்வாகத்திறன் மூலம் இந்திய அணி வெற்றிகளை குவிக்கும். மேலும் அந்த வெற்றிகளின் மூலம் ஐசிசி பிசிசிஐ-யை நிச்சயம் திரும்பிப் பார்க்கும். மேலும் கங்குலி ஏற்க இருக்கும் இந்தப் உதவி பதவிக்காக எனது வாழ்த்துக்களை நான் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அக்தர் கூறினார்.

Advertisement