டி20 உலககோப்பையில் எந்தவொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய – அகீல் ஹூசேன்

Akeal
- Advertisement -

ரோவ்மன் பவல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ள அந்த அணி இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றி தங்களது அணியின் பெயரை உலகிற்கு உரக்க சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் விளையாடி வருகிறது.

அதோடு இம்முறை உலக கோப்பையை வென்றால் தங்களது அணிக்கு ஸ்பான்சர் கிடைப்பார்கள் என்பதினாலும் தாங்கள் கோப்பையை கைப்பற்ற போகிறோம் என்று ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் முக்கியமான ஆட்டத்தில் உகண்டா அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் டாஸ் வென்றம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது.

பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய உகாண்டா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீட்டு கட்டுப்போல் விக்கெட்டுகளை சரிய விட்டது.

- Advertisement -

குறிப்பாக 12 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த உகாண்டா அணி 39 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 134 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக 4 ஓவர்களை வீசிய அகீல் ஹுசேன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதையும் படிங்க : வெறும் 8% வாய்ப்பு.. 92% அசாத்தியத்தை சாத்தியமாக்கிய இந்தியா.. பாகிஸ்தானை வீழ்த்தி 2 உலக சாதனை

மேலும் டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக முதல் பந்துவீச்சாளராக அவர் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் உலககோப்பை டி20 தொடரில் எந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டை எடுக்காத வேளையில் அகீல் ஹுசேன் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement