நேரலையில் குறைத்து எடை போட்ட ரவி சாஸ்திரி.. 2 விக்கெட்ஸ் எடுத்து வாயை அடைத்த ஆகாஷ்.. சொன்னது என்ன?

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி பர்மிங்கம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றது. ஜூலை 2ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 மற்றும் 427/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, 161 ரன்கள் குவித்து இந்தியாவை வலுப்படுத்தினார்.

அதே போல இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 180 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கு சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். இறுதியில் 608 என்ற இமாலய இலக்கைத் துரத்தும் இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 0, பென் டக்கெட் 25, ஜோ ரூட் 6 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

குறைத்து மதிப்பிட்ட சாஸ்திரி:

அதனால் இன்றைய கடைசி நாளில் 77/3 என தடுமாற்றமாக ஆட்டத்தைத் துவங்கிய இங்கிலாந்துக்கு எதிராக முகமது சிராஜ் பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த அவர் நல்ல ஃபார்முக்கு வந்துள்ளார். இருப்பினும் வித்தியாசமாக யோசித்த கேப்டன் சுப்மன் கில் ஆரம்பத்திலேயே ஆகாஷ் தீப்பை பவுலிங் செய்ய வைத்தார்.

ஆனால் அவருடைய திறமையை குறைத்து மதிப்பிட்ட ரவி சாஸ்திரி “இந்த நேரத்தில் சிராஜ் தான் பௌலிங் செய்ய வேண்டும்” என்று விமர்சித்தார். இது பற்றி நேரலை வர்ணனையில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் மிகவும் சீனியர் மற்றும் முதல் இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் தற்போது பவுலிங் செய்யாததை என்னால் நம்ப முடியவில்லை”

- Advertisement -

வாயை அடைத்த ஆகாஷ்:

“சிராஜ் முதல் இன்னிங்ஸில் 6 தற்போது 1 விக்கெட் எடுத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் மிட்-ஆன் பகுதியிலிருந்து ஜூனியர்கள் பவுலிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். அவர் அப்படி கூறி முடித்த சில ஓவர்களிலேயே நங்கூரமாக விளையாடிய ஓலி போப்பை 24 ரன்னில் அவுட்டாக்கிய ஆகாஷ் தீப் மறுபுறம் சவாலைக் கொடுத்த ஹாரி ப்ரூக்கையும் 23 ரன்னில் காலி செய்தார்.

இதையும் படிங்க: எம்.எஸ் தோனியின் சாதனையை சேனா நாடுகளில் முறியடித்து ரிஷப் பண்ட் அசத்தல் – விவரம் இதோ

அந்த வகையில் தம்மை குறைத்து மதிப்பிட்ட ரவி சாஸ்திரியின் வாயை ஆகாஷ் தீப் உடனடியாக 2 விக்கெட் எடுத்து அடைத்தார் என்றே சொல்லலாம். அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடிய நிலையில் 32 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். அதனால் உணவு இடைவெளியில் 153/6 என தத்தளிக்கும் இங்கிலாந்துக்கு களத்தில் ஜேமி ஸ்மித் 32* ரன்களுடன் உள்ளார்.

Advertisement