தள்ளாடும் இங்கிலாந்து.. நோ-பாலால் பறிபோன முதல் விக்கெட்.. மனம் தளராமல் மாஸ் சம்பவம் செய்த ஆகாஷ் தீப்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

எனவே இத்தொடரை வெல்வதற்கு இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் ஆகாஷ் தீப் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஓப்பனிங் ஜோடி விரைவாக ரன்கள் குவிக்க முயற்சித்தது.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
அப்போது 4வது ஓவரை வீசிய ஆகாஷ் தீப் ஐந்தாவது பந்தில் ஜாக் கிராவ்லியை போல்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தார். ஆனால் வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து வீசியதால் அதை நோபால் என்று அம்பயர் அறிவித்ததால் தன்னுடைய சர்வதேச கேரியரை ஆகாஷ் தீப் மிகவும் ஏமாற்றத்துடன் துவங்கினார். இருப்பினும் மனம் தளராத அவர் ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்தில் பென் டக்கெட்டை 11 ரன்களில் அவுட்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தார்.

அதோடு நிற்காத அவர் 4வது பந்தில் அதற்கடுத்ததாக வந்த இங்கிலாந்தின் துணை கேப்டன் ஓலி போப்பை டக் அவுட்டாக்கி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அபாரமான கம்பேக் கொடுத்தார். அதனால் 47/2 தடுமாறிய இங்கிலாந்துக்கு மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி தொடர்ந்து அதிரடியாக விளையாடி 42 (42) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் துல்லியமாக பந்து வீசிய ஆகாஷ் தீப் 12வது ஓவரின் 5வது பந்தில் ஜாக் கிராவ்லியை கிளீன் போல்ட்டாக்கி ஃபெவிலியன் அனுப்பி வைத்தார். அந்த வகையில் நோபாலில் அறிமுக விக்கெட்டை தவற விட்டாலும் மனம் தளராத ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்தின் டாப் 3 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்கு இப்போட்டியில் அபாரமான துவக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலுந்து மேலும் ஒரு வீரர் விலகல்.. திரும்பி வர வாய்ப்பில்லை – விவரம் இதோ

குறிப்பாக பும்ரா விளையாடாததால் இந்தியா பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை நிரப்புவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்ற வகையில் ஆகாஷ் தீப் அறிமுக போட்டியிலேயே அசத்தியுள்ளது ரசிகர்களை பாராட்ட வைக்கிறது. அதனால் சற்று முன் வரை இங்கிலாந்து 64/3 என தள்ளாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement