விராட் பாய் தான் அதை தாமாக கொடுத்தாரு.. இந்தியாவை ஃபாலோ ஆனிலிருந்து காப்பாற்றியது பற்றி ஆகாஷ் தீப்

Akash Deep
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறாமல் வெளியேறிய இந்தியா பார்டர் கவாஸ்கர் கோப்பை 10 வருடங்கள் கழித்து நழுவ விட்டது. முன்னதாக அந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் ஜஸ்ப்ரித் பும்ரா 32 எடுத்தது உட்பட சில அற்புதமான போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தியது.

அந்த வகையில் காபாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ஃபாலோ ஆன் தோல்வியை தவிர்க்க ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் வைத்திருந்த இந்தியாவுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டதால் ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அப்போது பும்ரா 10*, ஆகாஷ் தீப் 31 ரன்கள் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து காப்பாற்றினர்.

- Advertisement -

விராட் கோலியின் பேட்:

குறிப்பாக பட் கமின்ஸ்க்கு எதிராக விராட் கோலி கொடுத்த பேட்டில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்த ஆகாஷ் தீப் இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார். அதை பெவிலியனில் இருந்து பார்த்த விராட் கோலி, ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் ஆகியோர் ரசிகர்களைப் போல கொண்டாடினர். இந்நிலையில் விராட் கோலி தாமாக பேட் கொடுத்ததாக ஆகாஷ் தீப் கூறியுள்ளார்.

அதை வைத்தே காபாவில் ஃபாலோ ஆனை தவிர்த்ததாகவும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆம் அது விராட் பையாவின் பேட். எம்ஆர்எப் லோகோ இருக்கும் அந்த பேட் அவருடையது என்பதை அனைவரும் அறிவார்கள். உங்களுக்கு பேட் வேண்டுமா? என்று விராட் கோலி தான் என்னிடம் கேட்டார்”

- Advertisement -

தாமாக கொடுத்துட்டாரு:

“அதற்கு ஆம் உங்களுடைய பேட்டை இந்த உலகில் இருக்கும் யார் தான் வேண்டாம் என்று சொல்வார் என அவரிடம் சொன்னேன். பின்னர் அவர் அதை எனக்கு கொடுத்தார். அவருடன் நான் தற்போது கொஞ்சம் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளேன். ஆனாலும் விராட் பையா போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்டவரிடம் பேட்டை கேட்கலாமா என்ற தயக்கமான எண்ணம் எப்போதும் உங்களது மனதில் இருக்கும்”

இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் தமிழக வீரர் சாய் சுதர்சன் தான்.. அவருக்கு அந்த சேன்ஸ் குடுங்க – ஆகாஷ் சோப்ரா

“குறிப்பாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் கவனத்துடன் இருப்பார். எனவே அவரை நீங்கள் தொல்லை செய்ய விரும்ப மாட்டீர்கள். இருப்பினும் விராட் பையா எனக்கு தாமாக அவருடைய பேட்டை கொடுத்தார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடரில் இந்திய அணி விளையாட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement