உன் திறமை உனக்கே தெரியலன்னு அவர் சொன்னது 4 விக்கெட்ஸ் எடுக்க ஹெல்ப் பண்ணுச்சு.. ஆகாஷ் தீப் பேட்டி

Akash Deep
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 180 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

பும்ராவின் இடத்தில் ஆகாஷ்:

இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முன்னதாக இப்போட்டியில் ஓய்வெடுக்கும் பும்ராவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆகாஷ் தீப் ஆரம்பத்திலேயே இங்கிலாந்தின் பென் டக்கெட், ஓலி போப்பை டக் அவுட்டாக்கி அசத்தினார். அதை விட ஹாரி ப்ரூக் – ஜேமி ஸ்மித் 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தனர்.

அப்போது ப்ரூக்கை கிளீன் போல்ட்டாக்கிய அவர் மொத்தம் 4 விக்கெட்டுகள் எடுத்து பும்ராவின் இடத்தில் அபாரமாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். இந்நிலையில் உன்னுடைய திறமை உனக்கே தெரியவில்லை என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சொன்ன வார்த்தைகளும் ஆதரவும் உத்வேகத்தைக் கொடுத்து சிறப்பாக செயல்பட உதவியதாக ஆகாஷ் தீப் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பயிற்சியாளரின் உத்வேகம்:

“பயிற்சியாளராக அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். இந்திய அணியில் இணைந்தது முதல் ஒரு வீரருக்கு தேவையான தன்னம்பிக்கையை அவர் எனக்குக் கொடுத்து வருகிறார். அந்த தன்னம்பிக்கையே களத்தில் என்னுடைய செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. அப்படி உங்களுடைய பயிற்சியாளர் உங்களை வலுவாக ஆதரிக்கிறார் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசுகிறார் என்பதை நீங்கள் அறிந்தால் தாமாக உங்களுக்குள் நம்பிக்கை வரும்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு சப்போர்ட் பண்றீங்களா? அம்பயருடன் நியாயமாக சண்டையிட்ட பென் ஸ்டோக்ஸ்.. நடந்தது என்ன?

“அந்த நம்பிக்கை களத்திலும் வெளிப்படும். கம்பீர எப்போதும் நேர்மறையான விஷயங்களை சொல்வார். குறிப்பாக “உங்களிடமும் உங்களுடைய கைகளிலும் இருக்கும் திறமை உங்களுக்கே தெரியாமல் இருக்கிறது என்று அவர் சொன்னார். ஒரு வீரருக்கு அது போன்ற ஊக்கம் முக்கியமானது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் சில நேரங்களில் நம்மையே நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியாது. ஆனால் கம்பீர் போன்ற அனுபவமிக்கவர் அப்படி சொல்லும் போது உங்களுடைய தன்னம்பிக்கை இயற்கையாகவே அதிகரிக்கும்” என்று கூறினார்.

Advertisement