அடுத்த போட்டியில் பும்ரா ஆடலனா.. அவரோட இடத்துக்கு வரப்போகும் வீரர் இவர்தான் – விவரம் இதோ

Bumrah and Akash
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுதினம் துவங்கவுள்ள இந்த போட்டி தற்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பும்ராவுக்கு பதிலாக இடம்பிடிக்கப்போகும் வீரர் யார்? :

ஏற்கனவே நடைபெற்று முடிந்த இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் என்கிற நிலையில் உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது. இவ்வேளையில் இந்த தொடரின் 5 போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அவர் கடைசி போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே அவர் இந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டதால் ஐந்தாவது போட்டியின் போது நிச்சயம் ஓய்வெடுத்துக் கொள்வார் என்றே தெரிகிறது. அப்படி ஒருவேளை பும்ரா ஓய்வெடுத்தால் அவரது இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது வரை வெளியான தகவலின் படி :

- Advertisement -

பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும் ஒருவேளை அவர் ஓய்வெடுத்துக் கொண்டால் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் வருவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த ஆகாஷ் தீப் பந்துவீச்சில் இந்திய அணிக்கு வலிமை சேர்த்திருந்தார்.

இதையும் படிங்க : கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? கோச் கம்பீர் – அளித்த பதில்

ஆனால் நான்காவது போட்டியின் போது அவரால் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இவ்வேளையில் தற்போது காயத்திலிருந்து மீண்டும் குணமடைந்துள்ள அவர் பும்ராவிற்கு பதிலாக இடம் பெறுவார் என்று தெரிகிறது. மேலும் மற்றொரு மாற்றமாக அன்ஷுல் கம்போஜ் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெறவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement