சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஒருநாள் கரியர் ஓவர்.. காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Chopra
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள வேளையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் ஜனவரி 12-ஆம் தேதிக்குள் தங்களது அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி ஏற்கனவே கெடு விதித்திருந்தது.

2 வீரர்களுக்கு ஒருநாள் அணியில் இடமில்லை :

இதன் காரணமாக அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவானது இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 பேர் கொண்ட இந்த இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பிடிப்பார்கள் என்பதால் இந்த தொடர்கான வீரர்களின் தேர்வு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்மிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் முன்னாள் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கு செட்டாக மாட்டார் என்று ஏற்கனவே தெரிந்துவிட்டது. அதுமட்டுமின்றி நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை.

- Advertisement -

அதே வேளையில் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக ரன்களை குவித்து வரும் ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே ஒருநாள் அணியில் இடம் பெற்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் அவருக்கு தான் முன்னுரிமை கிடைக்கும். அதேபோன்று தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், அவருக்கு மாற்றுவீராக கே.எல் ராகுலும் இடம்பிடித்து உள்ளதால் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பு இல்லை.

இதையும் படிங்க : தலை கீழாக நின்னாலும் சஞ்சு சாம்சனுக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் கிடையாது – காரணம் இதோ

சஞ்சு சாம்சன் தற்போதைய நிலையில் டி20 துவக்க வீரராக விளையாடி வரும் வேளையில் அவரை ஒருநாள் அணியில் சேர்க்க தேர்வுக்குழு பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால் அவரும் இந்திய ஒருநாள் இடம் பெற மாட்டார் என ஆகாஷ் சோப்பரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement