2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்திற்கு தோனி செல்வாரா? அதில் என்ன சிக்கல் இருக்கு – விளக்கமளித்த ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்த பின்னரும் தோனி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்காமல் இருந்து வருகிறார். இதனால் நிச்சயம் அவர் அடுத்த ஆண்டு சில போட்டிகளில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமும் தோனியின் ஓய்வு அவருடைய முடிவு தான் அதை அவரே எடுக்கட்டும் அதுவரை அணியில் தொடர்வார் என்று உறுதி செய்துவிட்டது. இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் வர இருப்பதால் தோனி அந்த ஏலத்தில் பங்கேற்பாரா? அப்படி ஒருவேளை சிஎஸ்கே அணி அவரை தக்கவைக்கும் பட்சத்தில் அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணியில் தோனி இருக்க வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக அவர் அணியில் இருப்பார். ஒருவேளை தனக்கான சம்பளம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வீணாகப்போகும் என்று அவர் நினைக்கலாம். ஏனெனில் அவரால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கட்டாயம் விளையாட முடியாது.

- Advertisement -

அதேபோன்று தன்னை தக்க வைப்பதால் மற்ற வீரர்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் அவர் உணர்வார். தனக்காக 8 கோடி முதல் 10 கோடி வரை சிஎஸ்கே அணி செலவு செய்தால் மற்ற வீரர்களை வாங்குவது சிக்கலாகும் என்றும் அவர் யோசிப்பார். என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணி தோனியை தக்க வைக்குமா? இல்லையா? என்று கேட்டால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியவில்லை.

இதையும் படிங்க : ராகுல் – ரோஹித் பாய் ஜனவரிலயே சொல்லிட்டாங்க.. சிஎஸ்கே அணியில் 6 பந்தில் அதிர்ஷ்டம் கிடைச்சுது.. துபே பேட்டி

ஆனால் அவர் நிச்சயம் ஏலத்திற்கு போக மாட்டார் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். அதேபோன்று சிஎஸ்கே அவரை தக்க வைக்குமா? அவர் போட்டியில் விளையாடுவாரா? என்பதை நம்மால் இப்போதைக்கு சொல்ல முடியாது. தோனியே முடிவெடுத்து அவர்களிடம் தெரிவித்தால் நிச்சயம் அவருடைய முடிவு தான் அங்கு இறுதியாக இருக்கும். எனவே தோனி மெகா ஏலத்தில் பங்கேற்பதும், அணியில் தக்கவைக்கப்படுவதும் அவரது கையில் தான் உள்ளது.

Advertisement