ராகுல் – ரோஹித் பாய் ஜனவரிலயே சொல்லிட்டாங்க.. சிஎஸ்கே அணியில் 6 பந்தில் அதிர்ஷ்டம் கிடைச்சுது.. துபே பேட்டி

Shivam Dube
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முன்னதாக ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீச மாட்டார்கள் என்பது முக்கிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை.

அதை சரி செய்வதற்காகவே 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல உதவிய சிவம் துவே இந்திய டி20 அணிக்குள் 5 வருடங்கள் கழித்துக் கொண்டு வரப்பட்டார். அந்த வாய்ப்பில் கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே அசத்தினார். அதைத் தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரிலும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடியதால் அவருக்கு உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ரோஹித் – ராகுல் அட்வைஸ்:
இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசிய அவர் பெரும்பாலான போட்டிகளில் பந்து வீசவில்லை. அதனால் அவருடைய பவுலிங் ஃபார்ம் என்ன என்பது தெரியாமல் இருந்தது ரசிகர்களுக்கு கவலையாக இருந்தது. ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த காரணத்தால் அயர்லாந்துக்கு எதிரான முதன்மைப் போட்டியில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடரிலேயே பந்து வீச தயாராக இருக்குமாறு ராகுல் டிராவிட் – ரோஹித் ஷர்மா தன்னிடம் சொன்னதாக சிவம் துவே தெரிவித்துள்ளார். அத்துடன் 2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஒரு ஓவர் வீசி விக்கெட்டை எடுத்தது தம்முடைய உலகக் கோப்பை வாய்ப்பை பிரகாசப்படுத்தியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் நான் ஒரு ஓவர் மட்டுமே வீசினேன்”

- Advertisement -

“ஆனால் அது நேர்மறையாக மாறியது. ஏனெனில் அந்த ஓவரில் நான் விக்கெட்டை எடுத்தேன். மேலும் வலைப்பயிற்சியில் நான் பந்து வீசுவதில் கடினமாக உழைத்தேன். எனவே போட்டியில் வாய்ப்பு கிடைத்த போது அது எனக்கு சாதகமாக அமைந்தது. நீ எப்போது வேண்டுமானாலும் 2 – 3 ஓவர்கள் வீச வேண்டிய சூழ்நிலை வரும் என்பதால் தயாராக இருக்குமாறு ராகுல் – ரோஹித் பாய் கூறியிருந்தனர்”

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி படைக்க இருக்கும் மாபெரும் சாதனை – 3 ஆவது வீரராக உச்சம் தொடவுள்ள கோலி

“குறிப்பாக ஆப்கானிஸ்தான் தொடரின் போது அணி நிர்வாகம் என்னை ஆல் ரவுண்டராக விளையாட விரும்புவதாக டிராவிட் தெரிவித்தார். அதே தொடரில் எனக்கு அவர்கள் சுதந்திரமும் கொடுத்தனர். ரோகித் சர்மாவும் “நீ பவுலிங், பேட்டிங் ஆகிய இரண்டையும் செய்ய வேண்டிய நிலை வரும்! என்று சொல்லியிருந்தார். அந்த வகையில் உருவான வாய்ப்பை நான் பிடித்துக் கொண்டேன்” என்று கூறினார்.

Advertisement