அவங்க வீக் டீம், இம்முறை அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு போகாது – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

ipl

- Advertisement -

கோப்பையை வெல்லுமா டெல்லி:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அனைத்து 10 அணிகளும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கோப்பையை ருசிக்காத அணிகளான டெல்லி, பெங்களூர், பஞ்சாப் போன்ற அணிகள் முதல் முறையாக கோப்பையை கொள்வதற்காக தீவிரமாகப் போராட உள்ளன.

இந்த தொடரில் முதல் முறையாக கோப்பையை வெல்வதற்கு ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் முழு மூச்சுடன் போட்டியிட தயாராக உள்ளது. கடந்த 2019-க்கு பின் பெயரையும் நிறத்தையும் மாற்றி சமீபத்திய சீசன்களில் தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை நெருங்கிய போதிலும் அந்த அணியால் முத்தமிட முடியாமல் இருந்து வருவது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது.

Dc

பிளே ஆஃப் சுற்றுக்கு போவது கடினம்:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறுவது கடினம் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த அணி மீது எனக்கு சற்று கவலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் முதல் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் எளிதாக தோற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு வேளை அந்த அணி முதல் 3 போட்டிகளிலும் தோற்கவும் வாய்ப்புள்ளது. ஒரு சில போட்டிகளில் ஏதேனும் ஒரு வீரர் அபாரமாக செயல்பட்டு தனி ஒருவனாக வெற்றியைப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால் ஒரு அணியாக அது போன்ற வெற்றிகள் தன்னம்பிக்கை கொடுக்காது” என கூறினார்.

chopra

அவர் கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அது என்னவெனில் டெல்லி அணிக்காக விளையாடும் முக்கிய வெளிநாட்டு வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறார்கள். அதனால் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பின்புதான் அவர்கள் டெல்லி அணியில் இணைய உள்ளதால் அதற்குள் அந்த அணி 3 போட்டிகளில் விளையாடவுள்ளது. எனவே அவர்கள் இல்லாமல் அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக டெல்லி அணி துவக்குவதற்கு வாய்ப்புகள் குறைவு என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

வீக் டீம் டெல்லி:
“இம்முறை அந்த அணி பிளே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் அதற்காக நான் ஆச்சரியப்பட மாட்டேன். சுமாரான செயல்பாடுகள், வெளிநாட்டு வீரர்களின் நிலைத்தன்மை போன்றவற்றின் காரணமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைவு என எனக்கு தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள் ஆரம்பத்திலேயே தோல்வியுடன் ஆரம்பித்தால் அதன்பின் எப்படி முடிப்பார்கள் என தெரியாது” என இதுபற்றி ஆகாஷ் சோப்ரா மேலும் தெரிவித்தார்.

rcbvsdc
RCBvsDC

கடந்த வருடங்களில் ஷ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவான், ரவிசந்திரன் அஸ்வின், ககிஸோ ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த அனுபவ வீரர்கள் அந்த அணியில் விளையாடி வந்ததால் எளிதாக வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது. ஆனால் இம்முறை அவர்களை கோட்டைவிட்டுள்ள அந்த அணி அவர்களுக்கு பதில் கேஎஸ் பரத், ரோவ்மன் போவெல், சர்ப்பிராஸ் கான் போன்ற வீரர்களை வாங்கியுள்ளது. இதனால் ரிக்கி பாண்டிங் – ரிஷப் பண்ட் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை உறுதியாக இருந்தாலும் அதில் உள்ள அனைத்து வீரர்களும் உறுதியாக வெற்றிகளைத் தேடி தருபவர்களாக இல்லை என்பதால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement