டி20 உலககோப்பையை ஜெயிச்சி குடுத்த அவருக்கே இந்திய அணியில் இடமில்லையா? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

Chopra
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய பின்னர் தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. இன்னும் இந்த தொடர் துவங்க ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதில் டி20 உலக கோப்பையில் விளையாடிய சில நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள வேளையில் சில புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏனெனில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் குரூப் 8 மற்றும் நாக்அவுட் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற ஒரு அங்கம் வகித்திருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் அவரை இலங்கை அணிக்கு தொடரில் ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இந்திய டி20 அணியில் குல்தீப் யாதவ் இடம் பெறாதது எனக்கு ஆச்சிரியத்தை அளிக்கிறது. ஏனெனில் உலகக்கோப்பை தொடரின் போது அவர் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

இதையும் படிங்க : அது வேற வாயா? இல்ல அட்மின் போட்டாரா? வைரலாகும் 2019 ட்வீட்டை கம்பீருக்கு காட்டி ரசிகர்கள் கேள்வி

அவர் இருக்கும் போது ரவி பிஷ்னாய் மற்றும் வாஷிங்டன் சுந்தரை ஏன் சேர்த்தார்கள்? என்று புரியவில்லை. அதேபோன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சாஹல் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பெறாதது ஏன்? என்றும் புரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோன்று ரசிகர்களும் இந்திய அணியின் அணித்தேர்வு குறித்து கலவையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement