22 வருடம் ஆச்சு.. வலிமையற்ற வெ.இ – இந்தியா விளையாடி என்ன பயன்? கிரிக்கெட்டை ரெண்டா பிரிங்க.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் அக்டோபர் 2ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து விளையாடும் இந்திய அணி இப்பதிவிடும் போது முன்னிலைப் பெற்று வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் அசுரனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் தற்சமயத்தில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதனால் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தரம் இல்லையே:

இந்நிலையில் 2002க்குப்பின் 22 வருடங்களாக இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்லவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடி என்ன பயன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் இத்தொடரில் வெல்வதால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் கிடைக்குமே தவிர தரம் கிடைக்காது என்று அவர் சாடியுள்ளார்.

எனவே இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முதல் தர அணிகள் ஒரு பிரிவாகவும் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற 2ஆம் தர அணிகளை மற்றொரு பிரிவாகவும் பிரிக்க வேண்டுமென கருத்துக்கு ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 டயர் சிஸ்டத்தின் முக்கியத்துவம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் 6 பேட்ஸ்மேன்களின் சராசரி 20களில் இருக்கிறது”

- Advertisement -

ரெண்டா பிரிக்கலாம்:

“சந்தர்பால் சராசரி மட்டுமே 30க்கு (31.11) மேலே இருக்கிறது. மற்ற அனைவருடைய சராசரி 25களில் இருக்கிறது. அப்படி நிறைய டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் ஒரு அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களின் சராசரி குறைவாக இருப்பது, அவர்களிடம் வலிமை இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அதற்கு போதுமானவர்களா?”

இதையும் படிங்க: தோனியிடம் நிறைய கத்துக்கிட்டேன்.. அதை புறக்கணிக்க போனை கையில் வெச்சுக்க மாட்டாரு.. சாய் கிசோர் பேட்டி

“இப்படிப்பட்ட சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டயர் சிஸ்டம் தேவைப்படுகிறதா? என்ற விவாதத்திற்கு இத்தொடர் உரமிடுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெறுவதற்காக அனைத்து அணிகளும் போட்டியிடுவதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. புள்ளிகளைப் பெறுவது முக்கியமாகவும் இருக்கிறது. ஆனால் அங்கே நீங்கள் தரத்தையும் போட்டியையும் எங்கிருந்து கொண்டு வருவீர்கள்? எதிரணியிடம் நீங்கள் 20 – 22 வருடங்களாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்கவில்லை. அதில் என்ன போட்டி இருக்கிறது?” என்று கூறினார்.

Advertisement