தோனியிடம் நிறைய கத்துக்கிட்டேன்.. அதை புறக்கணிக்க போனை கையில் வெச்சுக்க மாட்டாரு.. சாய் கிசோர் பேட்டி

Sai Kishore
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி ஓய்வுக்கு பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றுள்ளார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் திகழும் தோனி ஏராளமான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

அதனால் நிறைய வீரர்கள் அவருடைய தலைமையில் விளையாடுவதற்கு விருப்பப்படுவார்கள். அதே போல எதிரணி வீரர்களும் போட்டி முடிந்த பின் தோனியிடம் பேசி அனுபவத்தையும் ஆலோசனையும் பெறுவார்கள். அந்த வகையில் தமிழக வீரர் சாய் கிஷோர் ஆரம்பக் காலங்களில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

தோனியிடம் கற்றுக்கொண்டேன்:

இருப்பினும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெறாத அவர் குஜராத் அணிக்காக வாங்கப்பட்டார். அந்த அணியில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2025 டிஎன்பிஎல் கோப்பையை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.

அந்த வகையில் திறமையான வீரராக வளர்ந்து வரும் அவர் தோனியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் காணப்படும் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக தோனி அலைபேசியை கையில் வைத்துக் கொள்ள மாட்டார் என்று அவர் கூறியுள்ளார். அதே போல தாமும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்க விரும்புவதாக சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஃபோன் வேண்டாம்:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எப்போதும் தன்னுடைய ஃபோனை எடுக்க மாட்டார். அவர் தன்னுடைய ஃபோனை ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு மைதானத்திற்கு வந்து விளையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அந்தளவுக்கு அவர் தன்னை பிரித்து வைத்துக் கொள்வார்”

இதையும் படிங்க: என்னோட மதிப்பு எனக்கு தெரியும்.. ஐ.எல்.டி டி20 ஏலத்தில் என்னை யாரும் வாங்காததும் ஹேப்பி தான் – அஷ்வின் கருத்து

“அது எனக்கு ஊக்கமளித்தது. ஏனெனில் சமூக வலைதளங்களில் ஈடுபட்டு கொள்வது உனக்குத் தேவையா? என்று என்னிடம் நானே கேட்டுக்கொள்கிறேன். எனவே தோனியை பார்த்து அதை பின்பற்றுவது எனக்கு உத்வேகம் அளிக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட சாய் கிசோர் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement